21 ஆண்டுகளுக்கு பின் இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் & உலக நாயகன் கமல்ஹாசன்... ஒரே ஸ்டூடியோவில் தலைவர் 170 & இந்தியன் 2! வைரல் வீடியோ இதோ

ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணைந்த புதிய வீடியோ,superstar rajinikanth ulaganayagan kamalhaasan met in thalaivar170 indian 2 shoot | Galatta

இந்திய சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் லேட்டஸ்ட் சந்திப்பின் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பும் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஒரே ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு அதே ஸ்டூடியோவில் இருவரும் ஒரே சமயத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட இந்த அழகிய நிகழ்வின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தலைவர் 170 , பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த வரும் திரைப்படம் இந்தியன் 2 இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் தற்போது சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோக்களில் ஒன்றான பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக இன்று வந்த உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் சந்தித்துக் கொண்ட அட்டகாசமான நிகழ்வு தற்போது மிகவும் ட்ரெண்டாகி உள்ளது. முன்னதாக 21 ஆண்டுகளுக்கு முன்பு பாபா மற்றும் பஞ்சதந்திரம் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இதே பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களை மிகவும் கவர்ந்த இந்த இரு பெரும் ஜாம்பவான்களின் சந்திப்பு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

 

ஜெயிலர் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு தனது அடுத்த படைப்பாக ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். கடந்த மாதம் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பூஜை உடன் தொடங்கப்பட்ட தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடைபெற்றது. தற்போது சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதே பிரசாத் ஸ்டுடியோவில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பிலும் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் இன்று கலந்து கொண்டனர். உலகநாயகன் கமல்ஹாசனின் படப்பிடிப்பு இதய ஸ்டூடியோவில் நடக்கிறது என்று அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவரை நேரில் வந்து சந்திப்பதாக தெரிவித்திருந்தார். இதனை அறிந்த உலக நாயகன் கமல்ஹாசன் என் நண்பனை காண நானே வருகிறேன் என்று உடனடியாக காலை 8 மணிக்கே தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார். தனது நண்பர் உலகநாயகனை பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த சூப்பர் ஸ்டார் உடனடியாக அவரை கட்டி அணைத்துக் கொள்ள இருவரும் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். இன்றைய தலைமுறை மக்களுக்கு நட்பின் உதாரணமாக விளங்கும் இருவரும் நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கிட்டத்தட்ட கடந்த 45 ஆண்டுகளாக சிறந்த நண்பர்களாக திரை துறையில் வலம் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.