அல்லு அர்ஜுனின் ட்ரெண்டிங் பாடல் படைத்த மேலும் ஒரு சாதனை !
By | Galatta | July 12, 2020 15:26 PM IST
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்.இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பூஜா ஹெக்டே,நிவேதா பெத்துராஜ் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர்.பட்டி தொட்டி எங்கும் இந்த படம் வசூல் மழை ஈட்டியது.
தபு,ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Haarika Hassine Creations மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர்.இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் மொழிகளை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.1 பில்லியன் யூடியூப் பாரவையாளர்களை பெற்று சமீபத்தில் சாதனை படைத்தது இந்த படத்தின் பாடல்கள்.டிக்டாக் இருந்த சமயத்தில் பலரும் இந்த பாடலுக்கு டிக்டாக் செய்து பதிவிட்டு வந்தனர்.குறிப்பாக பிரபலங்களும் இந்த பாடலுக்கு தங்கள் டிக்டாக்கை பதிவிட்டு வந்தனர்.
இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான புட்டபொம்மா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இந்த பாடலுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக்டாக் செய்யும் அளவிற்கு இந்த பாடல் பிரபலமாக இருந்தது.யூடியூப்பில் பல சாதனைகளை நிகழ்த்தி வந்த இந்த பாடல் தற்போது மேலுமொரு சாதனையை படைத்துள்ளது.இந்த பாடல் யூடியூபில் 260 மில்லியன் பார்வையாளர்களை பெற்று தெலுங்கில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ பாடல் என்ற சாதனையை சில நாட்களுக்கு முன் படைத்தது.இதனை தொடர்ந்து இந்த பாடல் வீடியோ 2 மில்லியன் லைக்குகளை பெற்று தெலுங்கு சினிமாவில் இந்த சாதனையை செய்யும் முதல் வீடியோ பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.இதனை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கோலாகலமாக ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் ரங்கஸ்தலம் பட இயக்குனர் இயக்கத்தில் தயாராகி வரும் புஷ்பா படத்தில் நடிக்கவுள்ளார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வந்துள்ளன.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பாதிப்பு குறைந்த பின் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Viral Video: Kadhai + Thiraikadhai + Vasanam + Iyakkam - Thalapathy Vijay
12/07/2020 01:38 PM
National Award Winning Legendary Actor's Family Tested Positive for Corona Virus
12/07/2020 12:18 PM