கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் தமிழ் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.தீரன் அதிகாரம் ஒன்று,கடைக்குட்டி சிங்கம் என இருவேறு கதைகளில் வெற்றிகண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இந்த வருட தொடக்கத்தில் வெளியான தேவ் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

Breaking Superhit Director of Actor Jayam Ravi Join Hands With Actor Karthi For New FIlm

ஆனாலும் தனது அடுத்தடுத்த படங்களின் தேர்வால் நம்மை ஆச்சரியப்பாவைக்கிறார்.மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கைதி,ரெமோ இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனுடன் ஒரு படம்,ஜீத்து ஜோசப்புடன் ஒரு படம் என செம பிஸியாக நடித்து வருகிறார்.

Breaking Superhit Director of Actor Jayam Ravi Join Hands With Actor Karthi For New FIlm

தற்போது இவரின் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.ஜெயம் ரவியை வைத்து அடங்க மறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலுவை இந்த வார இறுதியில் சந்தித்து கதை கேட்கவுள்ளார் என்ற தகவல் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.

Breaking Superhit Director of Actor Jayam Ravi Join Hands With Actor Karthi For New FIlm

மேலும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Breaking Superhit Director of Actor Jayam Ravi Join Hands With Actor Karthi For New FIlm