தமிழ் சினிமாவின் சிறந்த Entertainerகளில் ஒருவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் மே 1ஆம் தேதி Mr.லோக்கல் திரைப்படம் வெளிவர உள்ளது.இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமாருடன் ஒரு படம் ,இரும்புத்திரை இயக்குனர் மித்ரனுடன் ஒரு படம்,பாண்டிராஜுடன் ஒரு படம்,விக்னேஷ் சிவனுடன் ஒரு படம் என அடுத்ததடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

Breaking Details on Sivakarthikeyan Next Collabaration With AR Murugadoss Assistant Director

இது தவிர கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சனுடனும் ஒரு படம் பண்ணுவார் என்று தெரிகிறது.இதனை அடுத்து இவர் அயோக்யா படத்தின் இயக்குனர் வெங்கட் மோஹனுடன் இணைவார் என்று தெரிகிறது.இவர் ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Breaking Details on Sivakarthikeyan Next Collabaration With AR Murugadoss Assistant Director

நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்த தகவலின்படி இருவரும் இணைந்து படம் எடுப்பது குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.இந்த செய்தி உண்மை என்றால் இருவரும் இணைந்து வெகு விரைவில் ஒரு படம் பண்ணுவார்கள் என்று தெரிகிறது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Breaking Details on Sivakarthikeyan Next Collabaration With AR Murugadoss Assistant Director