இளைஞர்களின் இன்ஸ்பிரஷன் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.Local.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் .அவரோடு ராதிகா ,சதிஷ் ,தம்பி ராமையா , எரும சாணி ஹரிஜா என நட்சத்திர பட்டாளமே இருக்கிறது .ஹிப்- ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .

Breaking Detailes on Kaththi Sensation Reunites With Music Director Anirudh For this Big Project

பொதுவாக ராஜேஷ் படங்களின் டைட்டில் அனைவரையும் ஈர்க்கும்படி இருக்கும். அதேபோல இந்த படத்திற்கும் பொருத்தமான டைட்டில் வைத்துள்ளார்.மேலும் ராஜேஷ் படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது.அவரோடு சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோவும் , சதிஷ்,யோகி பாபு போன்றவர்களும் கைகோர்ப்பதால் ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Breaking Detailes on Kaththi Sensation Reunites With Music Director Anirudh For this Big Project

இந்த படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது இந்த படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கும் இந்த படத்தில் அனிருத் - சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Breaking Detailes on Kaththi Sensation Reunites With Music Director Anirudh For this Big Project

ஏற்கனவே அனிருத் இசையில் எதிர்நீச்சல்,வணக்கம் சென்னை,கத்தி போன்ற படங்களில் இருவரும் சேர்ந்து வேலை பார்த்துள்ளனர்.இதையடுத்து இருவருக்கும் எந்த படத்திலும் சேர்ந்து பணியாற்றாததால் இருவருக்கும் மோதல் என்று சமூக வலைத்தளத்தில் வதந்திகள் பரவின.

Breaking Detailes on Kaththi Sensation Reunites With Music Director Anirudh For this Big Project

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த செய்தி வந்துள்ளதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Breaking Detailes on Kaththi Sensation Reunites With Music Director Anirudh For this Big Project