“என் வாழ்நாள் கனவில் ஒன்று நிறைவேறியது..” உலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த ‘2018’ பட இயக்குனர்.. இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..

உலகநாயகன் கமல் ஹாசன் குறித்து 2018 பட இயக்குனர் கருத்து வைரல் பதிவு உள்ளே - 18 movie director jude anthany joseph about kamal haasan | Galatta

தென்னிந்தியா சினிமாவில் இந்த ஆண்டு வெளிவந்து நாடு முழுவதும் அதிகம் பேசப்பட்ட திரைப்படம் ‘2018’. கடந்த 2018 ன் போது கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தை அடிப்படையாக கொண்டு மலையாள திரையுலகில் பிரம்மாண்டமாக வெளியான இப்படத்தினை இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப் இயக்கியுள்ளார். இப்படத்தில் டொவினோ தாமஸ் கதாநயாகனாக நடிக்க இவருடன் இணைந்து குஞ்சகோ போபன், நரேன், ஆசிப் அலி, வினித் ஸ்ரீனிவாசன், லால், அஜு வர்கீஸ், கலையரசன், ஹரி கிருஷ்ணன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த மே 5ம் தேதி வெளியாகி  மலையாள மொழியில் கிடைத்த வரவேற்பையடுத்து இப்படத்திற்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைக்க தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து 2018 திரைப்படம் மிகப்பெரிய வசூலை குவித்தது. மலையாள திரையுலகில் இது வரை அதிக வசூல் குவித்த திரைப்படங்களில் முதல் இடத்தில் தற்போது 2018 திரைப்படம் இருந்து வருகிறது. பிரம்மாண்ட வெற்றியையடுத்து இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப் தற்போது லைகா நிறுவனத்துடன் இணைந்து புது படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப் தற்போது உலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அதனுடன் “நான் ஒரு இயக்குநர், நடிகர், சினிமா ப்ரியர் என அழைக்கப்படுகிறேன் என்றால், அதுக்கு காரணம் பன்முக திறன் கொண்ட இந்த ஜீனியஸ் தான் காரணம். திரையிலும் வெளியேயும் உள்ளேயும் இந்த மனிதனின் மேஜிக்கைப் பார்த்து தான் வளர ஆரம்பித்தேன். சினிமாவின் என்சைக்லோபீடியாவை நேரில் சந்தித்தது எனக்கு கிடைத்த பாக்கியம். இதுவரை என் வாழ்நாளில் நடந்த மிகச் சிறந்த விஷயம் இதுதான். ஃபேன்பாய் தருணம் இது. அவரை நேரில் பார்த்தபோது உண்மையில் நடுங்கித்தான் போனேன். லவ் யூ சார். எனது வாழ்நாள் கனவில் ஒன்று நிறைவேறியது.” என பதிவிட்டுள்ளார். இதையடுத்து இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப் அவர்களின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

A post shared by Jude Anthany Joseph (@judeanthanyjoseph)

இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் லைகா தயாரிப்பு கூட்டணியில் இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஏற்கனவே பிரபல நடிகர் நிவின் பாலி நடிக்கவுள்ளதாக தகவல் பரவி இருந்தது. அதை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் இருக்கும் புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலானது. அதை தொடர்ந்து ரசிகர்கள் தமிழ் மலையாளத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார் என்று கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தளபதி விஜய் பாணியில் திடீரென இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்த பவன் கல்யாண் – ஒரு மணி நேரத்தில் இத்தனை ஃபாலோவர்ஸா..! விவரம் உள்ளே..
சினிமா

தளபதி விஜய் பாணியில் திடீரென இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்த பவன் கல்யாண் – ஒரு மணி நேரத்தில் இத்தனை ஃபாலோவர்ஸா..! விவரம் உள்ளே..

கோலிவுட்டின் தரமான சம்பவம்.! சுப்ரமணியபுரம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவு.. -  நெகிழ்ந்து பேசிய சசிகுமார், சமுத்திரகனி..
சினிமா

கோலிவுட்டின் தரமான சம்பவம்.! சுப்ரமணியபுரம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவு.. - நெகிழ்ந்து பேசிய சசிகுமார், சமுத்திரகனி..

5 ஆண்டு கனவை நிறைவேற்றிய ‘குக்கு வித் கோமாளி’ பிரபலம் பாலா.. குவியும் பாராட்டுகள்.. – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

5 ஆண்டு கனவை நிறைவேற்றிய ‘குக்கு வித் கோமாளி’ பிரபலம் பாலா.. குவியும் பாராட்டுகள்.. – வைரலாகும் வீடியோ உள்ளே..