5 ஆண்டு கனவை நிறைவேற்றிய ‘குக்கு வித் கோமாளி’ பிரபலம் பாலா.. குவியும் பாராட்டுகள்.. – வைரலாகும் வீடியோ உள்ளே..

ஆதரவற்றோர் உதவிக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த KPY பாலா வைரல் வீடியோ உள்ளே - KPY bala gifted ambulance to old age home video goes viral | Galatta

ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்சிகளில் ஒன்றான விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் கலக்கப் போவது நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் பாலா. தன் தனித்துவமான உடல் மொழியினாலும் அட்டகாசமான காமெடி கவுண்ட்டர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் தொடர்ந்து அதே விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார். அனைத்து தரப்பு வயதினரையும் அடுக்கு மொழி வசனங்களை கொண்டு சிரிக்க வைக்கும் பாலா தொலைக் காட்சி மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்ட பாலா விஜய் தொலைக்காட்சியில் முழு நேர பங்கேற்பாளராக இருக்க முடியாத அளவு பட வாய்புகளும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் வாய்ப்பும் குவிந்து வருகின்றது.

காமெடியனாக மட்டுமல்லாமல் தொகுப்பாலாராகவும் பல திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்வு போன்றவற்றையும் பாலா தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் விஜய் தொலைக் காட்சியில் ஒளிப்பரப்பான சமீபத்திய சீசனில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியை பாலா தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

பாலா ஒரு காமெடி கலைஞராக மட்டுமல்லாமல் பல ஆண்டுகளாக ஆதரவற்றோருக்கும் உதவும் மாமனிதராகவும் இருந்து வருகிறார். சமூக பணிகளை பல வழிகளில் செய்து சமூகத்தில் தனி மரியாதை பெற்று வருகிறார்.  ஏற்கனவே ஏழை குழந்தைகழலி படிக்க வைப்பது, ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுவது என பல சமூக நல தொண்டு பணிகளை பாலா செய்து வருவதாக பல மேடைகளில் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பிரபல நடிகர் பவா லக்ஷ்மணன் சிகிச்சைக்காக நேரில் சென்று பண உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நிகழ்சிகள் மற்றும் திரைத்துறையில் வரும் வரவை நல தொண்டுகளுக்கு செலவு செய்து ரசிகர்களிடையே நன்மதிப்பை பெற்ற பாலா தற்போது தன்னுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில்,

முதியோர் இல்லத்திற்காக ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி தர வேண்டும் என்று 5 ஆண்டு காலமாக கனவாக இருந்துள்ளதாகவும் அந்த நேரத்தில் தன்னிடம் போதுமான பண வசதி இல்லாததால் அதை செய்ய முடியாமல் இருந்தது. தற்போது இந்த நிலையில் தன்னுடைய சொந்த காசில் இந்த ஆம்புலன்ஸ் வாங்கியுள்ளதாகவும் அதை தற்போது அவரது பிறந்தநாளன்று நினைவாக்கியிருப்பதாகவும் பாலா தெரிவித்துள்ளார். பாலாவின் இந்த செயல் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றது, மேலும் பாலா பதிவிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்த்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

A post shared by Bj Bala (@bjbala_kpy)

 

“ஒரே படத்தில் சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்த முடியாது” பா ரஞ்சித் பதிவிற்கு உதயநிதி ஸ்டாலின் பதில்..! - ‘மாமன்னன்’ குறித்து வைரலாகும் காரசார பேச்சு..
சினிமா

“ஒரே படத்தில் சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்த முடியாது” பா ரஞ்சித் பதிவிற்கு உதயநிதி ஸ்டாலின் பதில்..! - ‘மாமன்னன்’ குறித்து வைரலாகும் காரசார பேச்சு..

‘கேஜிஎஃப்’ பட இயக்குனரின் அடுத்த பக்கா ஆக்ஷன் திரைப்படம்.. - மிரட்டலான போஸ்டருடன் வெளியான பிரபாஸின் ‘சலார்’ பட டீசர் அப்டேட்..!
சினிமா

‘கேஜிஎஃப்’ பட இயக்குனரின் அடுத்த பக்கா ஆக்ஷன் திரைப்படம்.. - மிரட்டலான போஸ்டருடன் வெளியான பிரபாஸின் ‘சலார்’ பட டீசர் அப்டேட்..!

“லோகேஷ் கிட்ட முன்னாடியே லைன் வாங்கிடுங்க..” தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்..! -  லியோ படப்பிடிப்பு குறித்து கௌதம் மேனன்.. Exclusive Interview இதோ..
சினிமா

“லோகேஷ் கிட்ட முன்னாடியே லைன் வாங்கிடுங்க..” தளபதி விஜய் கொடுத்த அட்வைஸ்..! - லியோ படப்பிடிப்பு குறித்து கௌதம் மேனன்.. Exclusive Interview இதோ..