பிக் பாஸ் தமிழ் சீசன் 7: 'VJஅர்ச்சனா தங்கமான பொண்ணு, மாயா & பூர்ணிமா சொம்பு..'- ஹவுஸ்மேட்ஸ்களுக்கு RJபிராவோ கொடுத்த TAG! ட்ரெண்டிங் வீடியோ

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ஹவுஸ்மேட்ஸ்களுக்கு RJபிராவோ கொடுத்த TAG,bigg boss tamil season 7 rj bravo given tags for housemates with reasons | Galatta

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த RJ பிராவோ கடந்த வார (நவம்பர் 25)சனிக்கிழமை, எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த RJ பிராவோ தனது பிக் பாஸ் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் இந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அனன்யா உள்ளே இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் (TAG) கொடுத்தது போல நீங்கள் உள்ளே இருந்திருந்தால் அந்த பெயர்களை யார் யாருக்கு எதற்காக கொடுப்பீர்கள் எனக் கேட்டபோது, வரிசையாக பதில் அளித்தார். அந்த வகையில், 

நரி: நரி நம்ம தினேஷ் தான்... பாசிட்டிவ் - நெகட்டிவ் என ரெண்டு விதத்திலும் சொல்லலாம். தினேஷ் உடைய ஒவ்வொரு நகர்வும் பார்த்தீர்கள் என்றால், அவர் வெளியில் இருந்து கேமை முழுவதுமாக படித்து விட்டு வந்திருக்கிறார். அவர் ஒருவரை ஆதரித்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும் ஆதரிக்காமல் இருந்தால் அதற்கு ஒரு காரணம் இருக்கும் அவர் மிகவும் சரியாக கணக்கு போட்டு விளையாடுவார் நாம் இதை செய்தால் வெளியில் கை தட்டுவார்கள் நான் இதை செய்தால் திட்டுவார்கள் என பார்த்து செய்வார் மிகவும் தந்திரமான ஒரு ஆள். 
EMPTY VESSEL: கூல் சுரேஷ் அண்ணா... அவர் என்ன செய்வார் என்றால் சண்டை நடக்கும் அவர் மௌனமாக வந்து சின்னதாக ஒன்று சொல்லி அதை ஏற்றி விடுவார் அது சில நேரம் ஜாலியாக இருக்கும் சில நேரம்... ஆனால் எனக்கு அவரை பிடிக்கும். 
மிக்சர்: விக்ரம் இப்போதுதான் தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறான். கொஞ்சம் மிச்சர் சாப்பிடுவதை விட இந்த வாரம் என்ன செய்தாரோ அதையே இன்னும் கொஞ்சம் நன்றாக செய்தால் அவர் நினைத்த மாதிரி டைட்டில் வின்னர் ஆகலாம்.  
PUPPET: அர்ச்சனா கொஞ்ச நாட்களுக்கு விசித்ரா மேடம் இடம் அப்படி இருந்தார். அர்ச்சனா மிகவும் அப்பாவி. நான் தனியாக பேசும் போது சொன்னேன் ஒருத்தர் உங்களை கருவியாக பயன்படுத்திக் கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது அதனால் நீங்கள் இப்படி பண்ணாதீர்கள் என்றேன். ஆனால் நேர்மையாக சொல்லப்போனால் அர்ச்சனா மிகவும் அப்பாவியான ஒரு தங்கமான பொண்ணு.  
கொசு: ரவீனா... ரவீனா அமைதியாக சில பேரை சப்போர்ட் பண்ணுவார். ஆனால் வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார். 
சொம்பு: மாயா & பூர்ணிமா இடையே எப்போதும் ஒரு உரையாடல்… இவர்கள் கேட்பது அவர் சொல்வதை இவர் கேட்பது என இருக்கும் இருவருக்கும் MUTUAL சொம்பு என கூட சொல்லலாம். வேறு யாருக்கும் மிகச் சரியாக பொருந்தாதது போல் தோன்றுகிறது. இவர்களுக்கு பொருந்தும். 
தவளை: பூர்ணிமா தான் நானே நினைத்து இருக்கிறேன் நிறைய நேரங்களில் சில உரையாடல்களை ஈசியாக முடித்திருக்கலாம். உள்ளே இருப்பதனால் அப்படி ஆகி விட்டார்களா இல்லை பொதுவாகவே அப்படித்தானா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த பிரச்சினையை மற்றவர்களை பேசவிடாமல், ஏதாவது ஒன்று பேசி கடைசியில் அவர் பேசிய விஷயமே அவருக்கு எதிராக வந்து நிற்கும். இதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். 
விஷ பாட்டில்: மணி, 
தேள்: விசித்ரா மேடம் தற்போது இந்த கேமை மிகவும் சரியாக விளையாடுவது அவர்தான். தனக்கு எதிராக ஒரு பத்து பேர் பேசினால் அவர்களை பேச விட்டு அதை எப்படி தனக்கு சாதகமாக மாற்ற முடியும் தெரிந்து அமைதியாக செய்வார். 
CRINGE: நிக்சனுக்கு தான்... அவன் தெளிவாக பேசுவான் அவன் ஐஷுவோடு சேர்ந்து இருந்த அந்த சில எபிசோடுகள் பார்த்து இருக்கிறேன். அவன் நிறைய அட்வைஸ் பண்ணுவான் போல தெரிகிறது. மேலும் கமல்ஹாசன் டாஸ்க்கில் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே அவன் செய்தான். “மனித காதல் அல்ல” என்றெல்லாம் ஏதோ செய்தான். அதை எல்லாம் கலாய்த்து கொண்டிருந்தோம். பொதுவாக கொஞ்சம் தெளிவாக இருக்கக்கூடிய ஒரு ஆள் தான் சில விஷயங்களுக்காக இதை கொடுக்கிறேன்."

என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட RJபிராவோவின் அந்த முழு பேட்டி இதோ…