பிக் பாஸ் தமிழ் சீசன் 7: ‘நான் பிரதீப்பை அப்படி பார்க்கவே இல்லை!’- RED CARD விவகாரம் பற்றி முதல் முறை மனம் திறந்து பேசிய RJபிராவோ! வைரல் வீடியோ

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 பிரதீப் RED CARD விவகாரம் பற்றி பேசிய RJபிராவோ,bigg boss tamil season 7 rj bravo about pradeep antony red card issue | Galatta

விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் WILD CARD ENTRY-யாக நுழைந்த பிரபலமான இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர் & ரேடியோ ஜாக்கி RJ பிராவோ கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார். இதை அடுத்து நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த RJ பிராவோ பல முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பிரதீப் ஆண்டனிக்கு RED CARD கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து முதல் முறை மனம் திறந்து பேசி இருக்கிறார். அப்படி பேசுகையில், 

“ரெட் கார்ட் தூக்கிய விவகாரம், அதை விசித்ரா அம்மா பக்கம் இருப்பவர்கள் எப்படி பார்த்தார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்... ஆனால் எனக்கு இரண்டு பக்கமும் எப்படி தெரிந்தது என்றால்..? அவர்களைப் பொறுத்தவரை எப்படி பார்த்தாலும் ஒருவருக்கு ஒருவரை தூக்க வேண்டும். அந்த வகையில் விசித்ரா அம்மா கொஞ்சம் பர்சனலாக இறங்குகிறாரோ? ஏனென்றால் அவருக்கும் பிரதீப்புக்குமே நிறைய சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தது. எனவே இதை ஒரு காரணமாக வைத்து அவர்கள் கொஞ்சம் விளையாடுகிறாரோ? ஆனால் அவர் மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடினார். இந்த பக்கம் ஒரு பாயிண்ட் இருந்தது. ஆனால் கோபத்தை வெளிப்படுத்துகிறேன் என்ற பெயரில் தேவையே இல்லாமல் மொத்த கேங்கும் பேரை கெடுத்துக் கொண்டார்கள். மாயா மற்றும் கேங்... மாயா பூர்ணிமா எல்லோரும்.. இதை நான் உணர்ந்து தான் அந்த பக்கமே போகவில்லை.. நான் எல்லோரிடமும் தெரிவித்தேன், “நான் ரெட் கார்ட் ஏன் தூக்கினேன்” என்பதற்கான காரணங்களை சொல்லிக் கொண்டிருந்தேன். நான் பிரதீப்பை அப்படி பார்க்கவே இல்லை, ஒரு வாரம் தான் எனக்கு அவனைத் தெரியும். இருந்த வரைக்கும் நானும் அவனும் நன்றாக தான் பேசிக் கொண்டிருந்தோம். என் கண் முன்னால் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. நான் ரெட் கார்ட் கொடுத்ததற்கான காரணம் என்னுடைய பெண் தோழிகள் சொன்னதை எல்லாம் வைத்து இந்த வீட்டிற்குள் இவ்வளவு கேமராக்கள் இருக்கிறது. அதனால் அவர்கள் பொய் சொல்ல வாய்ப்பில்லையோ? என்று நினைத்து தான் நான் ரெட் கார்ட் கொடுத்தேன். என்றார். 

தொடர்ந்து அவரிடம், “பிரதீப் உடன் உங்களுக்கு நல்ல நட்பு இருந்தது என சொல்கிறீர்கள் அப்படி இருக்கும்போது ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள்?” என கேட்டபோது, “முடிவெடுப்பது என்பது எனக்கு அவரை ஒரு வாரம் தானே தெரியும் ஒருவர் நல்லவர் கெட்டவர் என்று முடிவெடுப்பதற்கு... மேலும் இடைவெளியில் சில விஷயங்கள் நடந்தது. “அன்று என்ன நடந்தது என்ன பேசினேன்” என பிரதீப் கேட்டுக் கொண்டிருந்தார். நான் அதை எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் சொல்லும்போது நான் பார்க்கவில்லை. ஆனால் கண்டிப்பாக மக்கள் பார்த்திருப்பார்கள் அல்லவா? இப்போது ஐஷு கூட என்னைப் பற்றி சொல்லியிருந்தார் அதை மக்கள் பார்த்து இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்கு அது தவறாக தானே தெரிந்தது. எனவே இது நடந்திருப்பதற்கான வாய்ப்பு இருப்பதால்தான் என்று தானே யோசிக்க முடியும். என்றார். 

மேலும் அவரிடம், “அதன் பிறகு நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா இது இவர்கள் எல்லோரும் இணைந்து கட்டிய கதையா என்று ஏதாவது ஒரு எண்ணம் உங்களுக்கு தோன்றியதா? அது பற்றி மீண்டும் பேச உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா?” என கேட்டபோது, “ஒரு வாரம் தானே நான் அவனை பார்த்திருக்கிறேன் ஒருவேளை அதற்கு முன்பு அவன் இப்படி இருந்தால்.. என இருந்தது நான் அவனை ஒரு வாரம் தானே பார்த்திருக்கிறேன் நல்ல கேமர் புத்திசாலித்தனமான ஒரு ஆள். ஒருவேளை அவன் இப்படி செய்து விட்டானோ? என இருந்தது. ஆனால் ரெட் கார்ட் கொடுத்து வெளியில் போனவர்களை பற்றி பெரிதாக பேசிக் கொள்ளக் கூடாது என்று ஒன்று இருந்தது அதனாலேயே நான் அதைப் பற்றி பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. ஆனால் பூர்ணிமாவிடம்  உங்களுக்கு ஏதாவது நடந்ததா என்று நான் கேட்டேன்..  அப்போது பூர்ணிமா என்னிடம் ஒன்று சொன்னார். அதன் பிறகு ஐஷு என்னிடம் ஒன்று சொன்னார். அதையெல்லாம் வெளியில் எப்படி பார்த்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை... நான் ஐஷுவிடம் கேட்டேன்.. அவர்கள் எல்லோரும் மிகவும் சோகமாக இருந்தார்கள். அவர்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே எல்லோரும் மிகவும் டாக்ஸிக்காக உணர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் மீண்டும் கேட்டேன் என்னதான் நடந்தது சொல்லுங்கள் என்று கேட்டேன். ரெட் கார்டு கொடுப்பதற்கு இரண்டு நாள் முன்பு கூட ஒன்றாக தானே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தீர்கள் என்ன ஆனது என்று கேட்டபோது, அப்போது அவர் சில விஷயங்களை சொன்னார் அதை நான் கேட்டுக்கொண்டேன் அவ்வளவுதான்.”

என தெரிவித்துள்ளார். மேலும் பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட RJ பிராவோவின் அந்த முழு பேட்டி இதோ...