பிக் பாஸ் சீசன் 4 துவங்கி 70 நாட்கள் ஆகியுள்ளது. இதுகுறித்து நேற்று கமல் பேசுகையில் போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கைதட்டினர். மகிழ்ச்சியாக இப்படி தொடங்கினாலும் உடனேயே கமல் டாப் கியரை போட்டு அன்பு கேங்கை பல காரணங்களுக்காக விளாச தொடங்கினார். மந்தமா இருக்குறதுக்கு, மந்தையை இருக்குறதுக்கு நிறைய வித்தியாசம் இல்லை என குரூப்பிஸம் பற்றி கோபத்துடன் பேசினார் கமல்.

புதிய மனிதா டாஸ்கில் அவர்கள் அணிக்கு விளையாடாமல் எதிர் அணிக்காக விளையாடியது யார் என கேட்றிந்தார் கமல். ரியோ தான் அதிகம் ஒத்துழைக்காமல் இருந்தார் என பாலாஜி என குற்றம் சாட்டினார். கேபிக்கு ரியோ ஆதரவாக பேசினார் என கமல் குற்றம்சாட்டினர். அடுத்து ஒரு பெரிய ஆப்பு வருது, இப்போவே சிரிச்சிடு என ரியோ கேபியிடம் டாஸ்க் பிரேக் டைமில் கூறினாராம்.

டாஸ்கில் ரியோ கேபிக்கு ஹிண்ட் கொடுத்தது பற்றி ஆரி கோபத்துடன் பேசினார். அந்த நேரத்தில் கேபிக்கும் ஆரிக்கும் சண்டை வெடித்தது. அந்த நேரத்தில் ரியோ வந்து, நான் அப்படி சொன்னதால் கேபி உடைந்திருந்தால் கேமில் நமக்கு நல்லது தானே என ரியோ கேட்டார். ஆனால் அது நடந்தது பிரேக் நேரத்தில் தானே அது எப்படி கேமில் வரும் என பாலாஜி பாயிண்டை பிடித்தார்.

இந்த இருவர் கண்டிப்பாக பைனலுக்கு வரவே மாட்டாங்க என சொல்லுங்கள் என கமல் கூறினார். அதற்கு பலரும் நிஷா, அர்ச்சனா ஆகியோர் பெயரை தான் கூறினார். இதில் ஹலைட் என்னவென்றால் அர்ச்சனா தன்னை தானே அந்த லிஸ்டில் நாமினேட் செய்துகொண்டார் என்பது தான். அன்புக்கு மதிப்பு இல்லாத இடத்தில நான் பைனலிஸ்ட் ஆக தகுதி இல்லை என நினைக்கிறேன் என அர்ச்சனா கூறினார்.

அடுத்து எலிமினேஷனுக்கு வந்தார் கமல். இறுதியில் ஷிவானி அல்லது நிஷா தான் லிஸ்டில் இருந்தனர். அதில் யாரை காப்பாற்ற வேண்டும் என கமல் கேட்டார். அதற்கு பலரும் ஷிவானி பெயரை தான் கூறினர். இறுதியில் நிஷா எலிமினேட் ஆனதாக கமல் அறிவித்தார். அவர் வெளியே வந்ததில் அர்ச்சனா தான் கதறி அழுதார். அன்பு கேங் வருத்தத்தில் இருந்தது. ஆனால் மற்றவர்களுக்கு இது சரியான ஒன்றாகவே தோன்றியது.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், நாமினேஷன் நடைபெறுகிறது. இதில் பலரும் ரியோவை நாமிநேட் செய்கிறார்கள். ரியோ தன் பக்கம் இருக்கும் நியாயங்களை முன் வைத்தாலும், ஹவுஸ்மேட்ஸ் பலரும் அவரை டார்கெட் செய்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல பாலாஜிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கூடுவதாக இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.