பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார்.

பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அமிர்தா ஐயர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.வினீத் வரப்ரஸாத் இந்த படத்தை இயக்குகிறார்.பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு லிப்ட் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இன்று படத்தின் நாயகன் கவினின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பிக்பாஸ் தொடரின் மூலம் கவினுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இயக்குனர் நெல்சனுக்கு உதவியாக இருந்து வந்துள்ளார் கவின்.

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணாமாக தள்ளிப்போயுள்ளது.ரசிகர் ஒருவர் இந்த படத்திற்காக போஸ்டர் ஒன்றை தயார் செய்து பதிவிட்டிருந்தார் இந்த போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.ரசிகர்களுடன் கலந்துரையாடுவது,இன்ஸ்டாகிராம் லைவ் போன்றவற்றின் மூலம் ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகின்றனர்.சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் கவின் அவ்வப்போது ரசிகர்களுடன் தன்னுடைய கருத்துக்களை பகிர்வார்.ரசிகர் உருவாக்கிய மாஸ்டர் போஸ்டர் கவின் கண்ணில் தென்படவே அதனை புகழ்ந்து தள்ளியுள்ளார்.இந்த போஸ்ட்டரை வெகுவாக பாராட்டிய கவின் ஒரு நிமிஷம் படத்தோட போஸ்ட்டருன்னு நெனச்சுட்டேன் செம டிசைன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கவின்.இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.