பாலிவுட்டில் சிறந்த நடிகைகளில் ஒருவர் ஹூமா குரேஷி. பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடித்த காலா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் நடித்த கேங்ஸ் ஆஃப் வசேப்பூர், பத்லாபூர், ஹைவே உள்ளிட்ட படங்கள் பெரிதளவில் ரசிகர்களை கவர்ந்தன. படங்கள் தவிர்த்து வெப்-சீரிஸ், குறும்படங்கள் என நடித்து வருகிறார். அதன் பிறகு தற்போது அஜித்தின் வலிமை படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஹுமா குரோஷி.

தற்போது கொரோனா லாக் டவுன் நேரத்தில் ஷுட்டிங் எதுவும் இல்லை என்பதால் அவர் தன்னுடைய வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறார். தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதில் அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் அதிகம் இருக்கும். இந்நிலையில் ஹீமா குரேஷி தன்னுடைய ஒர்க் அவுட் செல்பி ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் தனக்கு இருக்கும் பயம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். 

என்னுடைய மிகப்பெரிய பயம் தோல்வி அடைவது பற்றி இல்லை, இழப்பது பற்றியும் இல்லை, அதிகம் உழைத்தும் வெற்றி கிடைக்காமல் போவது பற்றியும் இல்லை. என்னுடைய பயம் சாதாரண ஒருவராக இறப்பது பற்றியது தான். அதனால் போராடு என் தோழா. கதவை விடாமல் தட்டு திறக்கப்படும் வரை அல்லது உங்கள் வலிமை அதை உடைத்தெறியும் வரை என ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார். தன்னுடைய ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த வரிகளை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் ஹுமா குரேஷி நடிப்பதாக செய்திகள் வெளியானது. இவர் ரோல் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஐதராபாத், சென்னை என இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மாறி, மாறி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஒட்டு மொத்தமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பியவுடன் வலிமை படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.