சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 

அதாவது, போட்டோ, வீடியோ, டான்ஸ், என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்து வந்தார்.  அதன்பின் பிக்பாஸ் வீட்டிற்கு போய்விட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பியுள்ள நிலையில், மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ளார்.  தினமும் மாலை 4 மணி ஆகிவிட்டால் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ஷிவானி எப்படா படம் போடூவாங்க என ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவரும் பிக் பாஸ் 4 வீட்டில் மிகவும் நெருக்கமாக இருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் தங்களுக்கு நடுவில் காதல் இல்லை என்றால் அவர்களை சொல்லிக் கொண்டனர்.

ஆனாலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் இது பற்றி அதிகம் விமர்சிக்கவும் செய்தனர். காதல் கண்ணை கட்டுதே என ஆரி ஒரு முறை அவர்கள் இருவரையும் நாமினேட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஷிவானி மீது காதல் சுத்தமாக இல்லை என வெளிப்படையாக கூறிவிட்டார் பாலாஜி.

பலமுறை இது போன்ற பிரச்சனைகள் நடந்த பிறகும் ஷிவானி மற்றும் பாலாஜி இருவரும் நெருக்கமாக தான் இருந்தனர். ஆனால் ஷிவானியின் அம்மா ஒருநாள் பிக்பாஸ் வீட்டுக்கு வந்து அவரை கண்டபடி திட்டினார். அதற்கு பிறகு அவர்கள் இருவரும் நடுவில் இருந்த நெருக்கம் காணாமல் போனது. ஷிவானி எலிமினேட் ஆன பிறகு இறுதி வாரத்தில் மீண்டும் வீட்டுக்கு வந்த போது பாலாஜியிடம் அதிகம் பேசக்கூட இல்லை. 

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் ஷிவானி. ஷிவானி தீவிர சிவகார்த்திகேயன் ரசிகை என்று அனைவரும் அறிந்ததே. நேற்று ரியோ பிறந்தநாளை கொண்டாட பிக்பாஸ் நண்பர்களுடன் சென்ற இடத்தில் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து கூறி வீடியோ பகிர்ந்துள்ளார்.