ஹிந்தியில் பிரபல நடிகைகளில் ஒருவர் ஹினா கான்.சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமாகி படிப்படியாக முன்னேறி தற்போது ஹிந்தியில் முக்கிய நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் ஹினா கான்.தற்போது சில முக்கிய படங்களிலும்,வெப் சீரிஸ்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  Yeh Rishta Kya Kehlata Hai என்ற தொடரில் அர்ச்சனா என்ற கேரக்டரில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார் ஹினா கான்.இந்த கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சில படவாய்ப்புகளும் அவருக்கு வந்தது.இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டிவி நடிகை என்ற பெருமையை பெற்றவர் ஹினா கான்.

இதனை தொடர்ந்து 2017-ல் நடைபெற்ற பிக்பாஸ் தொடரின் 11ஆவது சீசனில் பங்கேற்று மக்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒருவராக மாறினார்.இதனை அடுத்து samrtphone,hacked உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு படமும் ஹிட் அடித்தது.இவர் நடிப்பில் உருவான unlock என்ற படம் சமீபத்தில் நேரடியாக OTTயில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

நடிப்பு மட்டுமின்றி டான்ஸ்,உடற்பயிற்சி என்று எல்லாத்திலும் அசத்துவார் ஹினா கான்.இவர் அவ்வப்போது தனது நடன வீடியோக்களையும்,உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.தற்போது தனது பிகினி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

A post shared by HK (@realhinakhan)