தமிழ்,தெலுங்கு,குஜராத்தி என்று பன்மொழிகளில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருபவர் நடிகை மோனல் கஜ்ஜார்.தமிழில் விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு படத்தில் நடித்த இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.தொடர்ந்து இவர் ஹீரோயினாக நடித்த வானவராயனும் வல்லவராயனும் திரைப்படத்திலும் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து பிற மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தார் மோனல் கஜ்ஜார்.சில வெப் சீரிஸ்களிலும் நடித்து அசத்தி வருகிறார் மோனல் கஜ்ஜார்.ஏற்கனவே ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சையமாக இருந்து வரும் இவர் சமீபத்தில் தெலுங்கில் முடிந்த பிக்பாஸ் சீசன் 4 தொடரில் பங்கேற்றிருந்தார்.

தெலுங்கில் முன்னணி நடிகர் நாகர்ஜுனா இந்த தொடரை தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பிக்பாஸ் பல போராட்டங்களை கடந்து சக போட்டியாளர்களை சமாளித்து அசத்திய மோனல் கஜ்ஜார் 90 நாட்களுக்கு பிறகு வெளியேறினார்.இந்த தொடரில் பங்கேற்றதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார் மோனல் கஜ்ஜார்.

ஹிந்தியில் சிறப்பு தோற்றங்களில் மட்டும் தோன்றி வந்த மோனல் கஜ்ஜார்,முன்னணி வேடத்தில் நடித்துள்ள ஹிந்தி படம் நேரடியாக ஜீ 5 தளத்திலும்,உத்தர பிரதேசத்தில் உள்ள சில திரையரங்கங்களிலும் வெளியாகவுள்ளது.Kagaaz என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.