தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்,பிரபலங்களுக்கு பிட்னஸ் ட்ரைனர் என்று தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் ஆரி அர்ஜுனா.2010-ல் ஷங்கர் தயாரிப்பில் வெளியான ரெட்டைசுழி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.தொடர்ந்து இவர் நடித்த மாலை பொழுதின் மயக்கத்திலே படமும் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

ஆரிக்கு தமிழ் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை கொடுத்த படம் நெடுஞ்சாலை.இந்த படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் ஆரி.தொடர்ந்து மாயா உள்ளிட்ட சில படங்களில் நடித்து கவனம் ஈர்க்க தொடங்கினார் ஆரி.படங்களில் நடிப்பதோடு இல்லாமல் பல சமூகஅக்கறை கொண்ட விஷயங்களை செய்து அதற்காகவே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் ஆரி.

சமீபத்தில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் முக்கிய போட்டியாளராக பங்கேற்று வருகிறார் ஆரி.ரசிகர்களின் சப்போர்டோடு பல போராட்டங்களை கடந்து வீட்டில் தனது முத்திரையை பதித்து வருகிறார் ஆரி.எல்லாம் மேல இருக்கவன் பாத்துப்பான்,அலேகா,பகவான் உள்ளிட்ட சில சில படங்களில் நடித்துள்ளார் ஆரி,இதில் சில படங்கள் ரிலீஸிற்கும் தயாராக உள்ளன.

ஆரியின் பகவான் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ஆரியின் அலேகா படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.ராஜமித்ரன் இயக்கும் இந்த படத்தின் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

A post shared by Aari Arujunan (@aariarujunanactor)