பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ்.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய கதகளி,வம்சம்,கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.கடைசியாக கார்த்தி நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படம் பட்டிதொட்டி எங்கும் செம ஹிட் அடித்தது.

Bigboss Producer Join Hands With Sivakarthikeyan Hit Film Director

சிவகார்த்திகேயன் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் SK 16 படத்தை இயக்கி வருகிறார்.தற்போது இவரது அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.கமல்ஹாசன் தொகுத்துவழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டு வெற்றிகரமான சீசன்களை தாண்டி தற்போது மூன்றாவது சீசனை துவங்கியுள்ளது.

Bigboss Producer Join Hands With Sivakarthikeyan Hit Film Director

இந்த தொடரின் தயாரிப்பாளர்களான Endemol Shine India நிறுவனம் தமிழ் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.இயக்குனர் பாண்டிராஜ் தற்போது இரண்டு கதைகளை இந்த நிறுவனத்திடம் கூறியுள்ளார்.இதில் ஒரு கதையை தயாரிக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bigboss Producer Join Hands With Sivakarthikeyan Hit Film Director