பிரபல தொகுப்பாளராக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி பின்னர் பல முன்னணி சேனல்களின் சீரியல்களில் பணிபுரிந்து அசத்தியவர் ஃபரீனா.சில சூப்பர்ஹிட் சீரியல்களில் சின்ன வேடங்களில் நடித்த இவர் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருந்தார்.

இந்த தொடரில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் ஃபரீனா அசாத் நடித்து வருகிறார்,இந்த கதாபாத்திரத்தில் நடித்து சில விருதுகளையும் வென்று அசத்தினார்.வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வரும் இவர் இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பார்.

2017-ல் Rahman Ubaidh என்பவரை திருமணம் செய்துகொண்டார்,இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் சில மாதங்களுக்கு முன் கர்பமாக இருப்பதை அறிவித்தார்.கர்பமாக இருபத்தோடும் ஷூட்டிங்கை தொடர்ந்து வந்த பரினா டெலிவரிக்கு சில வாரங்கள் முன் பிரேக் எடுத்துக்கொண்டார்.

இவருக்கு கடந்த மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று அறிவித்தார் பரினா.குழந்தை பிறந்த பின் சிறிய பிரேக்கில் இருந்த பரினா , தற்போது பாரதி கண்ணம்மா தொடரின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளதாக சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.இவரது வருகைக்கு பின் தொடரின் விறுவிறுப்பு கூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

bharathi kannamma farina azad joins shoot after delivery arun vinusha devi