விஜய் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று சரவணன் மீனாட்சி.இந்த தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர் பிரவீன் தேவசகாயம்.அடுத்ததாக விஜய் டிவியின் மற்றுமொரு சூப்பர்ஹிட் தொடரான ராஜா ராணி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார்.

சில பல தொடர்களில் அடியாள்,ரௌடி என நடித்து வந்த பிரவீன் அடுத்ததாக விஜய் டிவியின் பெரிய ஹிட் தொடரான ஈரமான ரோஜாவே தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.முதலில் இந்த தொடரில் வில்லனாக வந்த இவர் கதையின்போக்கில் கடைசி நாயகனாக அவதரித்தார்.இந்த தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் பிரவீன்.

இதனை தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அசத்தி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றிருந்தார்.இவற்றை தவிர அவ்வப்போது சில படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து அசத்தியுள்ளார் பிரவீன்.

தற்போது இவருக்கும் ராஜா ராணி சீசன் 1 தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய ஐஸ்வர்யா அப்பையா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.