தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் பரத் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த நடுவண் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. மேலும் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த குருப் திரைப்படத்திலும் பரத் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக ராட்சசன், மரகத நாணயம் ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பு நிறுவனமான AXESS FILM FACTORY தயாரிப்பில் த்ரில்லர் திரைப்படமாக தயாராகும் மிரள் திரைப்படத்தில் நடிகை வாணி போஜன் உடன் இணைந்து நடித்து வரும் நடிகர் பரத்தின் ஐம்பதாவது திரைப்படமாக தயாராகும் லவ் திரைப்படத்திலும் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் விஜய்ராஜ் இயக்கத்தில் தமிழில் பரத் நடிக்கும் திரைப்படம் முன்னறிவான். லிப்ரா ப்ரோடக்ஷ்னஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் முன்னறிவான் படத்தில் பரத்துடன் இணைந்து கதாநாயகியாக ஜனனி நடிக்க, அசார் மற்றும் கரு பழனியப்பன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஓம் நாராயண் ஒளிப்பதிவில், ஜெரோம் அலன் படத்தொகுப்பு செய்யும் முன்னறிவான் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில் முன்னறிவான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. பரத்தின் முன்னறிவான் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Finally with all your blessings #Munnarivaan coming soon@fatmanravi
Dir by #VijayRaj@GhibranOfficial@nomprakash@alenedit@stuntsaravanan@hinasafaa234 @AsokanGI @VarunNZ@R_chandru @onlynikil @bharathhere@jananihere@mirchisenthil@actorazhar @karupalaniappan pic.twitter.com/Pi9OXUdJmr

— LIBRA Productions (@LIBRAProduc) June 28, 2022