தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. 

Best Actor Soundar Raja Joins The Thalapathy Sixty Three Movie In Atlee Direction

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் போன்றோர் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இப்படம் பக்கா மாஸாக இருக்கும் என்றும் தெரிவித்தனர் படக்குழுவினர்.

Best Actor Soundar Raja Joins The Thalapathy Sixty Three Movie In Atlee Direction

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், படத்தில் நடிகர் சௌந்தர் ராஜா நடிக்கவுள்ளாராம். சௌந்தரபாண்டியன், தர்மதுரை போன்ற படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ட்விட்டரில் இயக்குனர் அட்லீக்கு நன்றி தெரிவித்து பதிவு செய்துள்ளார்.

Best Actor Soundar Raja Joins The Thalapathy Sixty Three Movie In Atlee Direction

படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் பிரசாத் லேப் இல் துவங்கப்பட்டது. சமீபத்தில் தளபதி 63 படத்தின் இன்ட்ரோ பாடல், தளபதியின் பெயர் மற்றும் ஜெர்ஸி நம்பர் குறித்த விவரம் வெளியாகியது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் தளபதி ரசிகர்கள்.