தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் இந்த படம் மிக பிரம்மாண்டமாக ஏப்ரல் 13ஆம் தேதி இன்று பிரம்மாண்டமாக ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.பல இடங்களில் ரசிகர்களின் சிறப்பு காட்சிகள் கொண்டாட்டம் என்று பட்டையை கிளப்பி வருகின்றனர்.இந்த படம் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தினை இன்று ரசிகர்களுடன் பல பிரபலங்களும் பார்த்து ரசித்து வருகின்றனர்.சென்னையில் பிரபல திரையரங்கில் முதல் காட்சியில் ரசிகர்களுடன் பீஸ்ட் படக்குழுவினர் நெல்சன்,அனிருத்,பூஜா ஹெக்டே,அபர்ணா தாஸ் உள்ளிட்டோருடன் நடிகை கீர்த்தி சுரேஷ்,ப்ரியங்கா மோகன்,தளபதி 66 இயக்குனர் வம்சி உள்ளிட்டோரும் பார்த்து ரசித்துள்ளனர்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.