இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் பாகுபலி. இப்படத்தின் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனையும் புரிந்தது. படத்தில் பாகுபலி மற்றும் கட்டப்பா பாத்திரத்திற்கு இணையாக ராஜ மாதா சிவகாமி பாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டது. 

Bahubali Series To Be Released By Netflix Starring Rahul Bose And Mirnal Thakur In Lead

மகிழ்மதியின் ராஜா மாதாவாக தோன்றும் சிவகாமி எப்படி ராஜமாதா ஆனார் என்பதையும். சிவகாமியின் பூர்வீகம் எது என்பதையும், மற்றும் சிவகாமி எதற்கு பாகுபலியை தத்தெடுத்து ஏன் என்பதை மைய்யமாக வைத்து ஆனந்த் நீலகண்டன் என்ற எழுத்தாளர் நாவலாக எழுதியுள்ளார்.   

தற்போது இந்த நாவல் படமாக மாறப்போகிறது. அதில் சிவகாமியின் சிறுவயது துவங்கி மகிழ்மதிக்கு எப்படி ராணியானார் என்றும் சீரிஸாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த தொடர் நெட்பிலிக்ஸில் வெளியாக உள்ளது.   

Bahubali Series To Be Released By Netflix Starring Rahul Bose And Mirnal Thakur In Lead

மேலும் ரம்யா கிருஷ்ணன் பாத்திரத்தில் மிருனால் தாக்கூர் நடிக்கிறார். நாசர் நடித்த பாத்திரத்தில் விஸ்வரூபம் படத்தின் வில்லன் ராகுல் போஸ் நடிக்கஉள்ளனர் என்ற செய்தி பாகுபலி ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாகியது.