பேட்ட ட்ரைலர் பற்றி பாகுபலி நடிகர் பதிவு !
By Sakthi Priyan | Galatta | December 28, 2018 17:27 PM IST
![பேட்ட ட்ரைலர் பற்றி பாகுபலி நடிகர் பதிவு ! - Tamil Movie Cinema News பேட்ட ட்ரைலர் பற்றி பாகுபலி நடிகர் பதிவு ! - Tamil Movie Cinema News](https://1480864561.rsc.cdn77.org/assets/news_images/maruthitalkies-1493714279-725x725-2843.jpg)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.
படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் 9-ம் தேதி வெளியாகி இணையதள வாசிகள் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் டீஸர் டிசம்பர் 12-ம் தேதியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளன்று காலை வெளியானது.
இப்படத்தின் ட்ரைலர் இன்று காலை வெளிவந்தது. ரஜினிகாந்தின் ஸ்டைலான இந்த ட்ரைலர் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.
தற்போது இப்படத்தின் ட்ரைலர் பார்த்த பாகுபலி வில்லனான நடிகர் ரானா டகுபட்டி ட்விட்டரில், அற்புதமாக உள்ளது எனவும் rajinified என்று பதிவிட்டுள்ளார்.
THIS IS AWESOME...RAJINIFIED https://t.co/M8EgjFA5rr
— Rana Daggubati (@RanaDaggubati) December 28, 2018