தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காதது ஏன்?- முக்கிய காரணத்தை பகிர்ந்த பப்லு ப்ரித்வி ராஜ்! வீடியோ இதோ

தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கிடைக்காதது குறித்து பேசிய பப்லு ப்ரித்வி ராஜ்,babloo prithveeraj about recognition in tamil cinema | Galatta

தனக்கென தனி பாணியில் அசத்தலான நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வித்தியாசமான வில்லன் நடிகராகவும் தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராகவும் திகழ்பவர் நடிகர் பப்லு ப்ரித்வி ராஜ். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களால் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்ட பப்லு ப்ரித்வி ராஜ் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சின்னத்திரையிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மெகா சீரியல்கள் என தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வருகிறார்.

இந்த நிலையில் நமது கலாட்டா சேனலில் ஸ்பெஷல் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பப்லு ப்ரித்வி ராஜ் தனது திரைப்படத்தின் பல சுவாரஸ்யமான நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், முன்னதாக மலையாள படம் என சொல்லி கிளாமர் திரைப்படங்களில் தன்னை நடிக்க வைத்தது குறித்த தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து வந்த நடிகர் பப்லு ப்ரித்வி ராஜ், நான் தேசிய விருது வென்று இருக்கிறேன் நந்தி விருது வென்று இருக்கிறேன் நாம் செய்த நல்ல விஷயங்களை எல்லாம் உடனே மறந்து விடுவார்கள். மலையாள படம் என நினைத்து தெரியாமல் நான்கு பிட்டு படங்களில் நடித்து விட்டேன் என தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தார். 

தொடர்ந்து அவரிடம், நீங்கள் சொன்னது போல் தேசிய விருது, நந்தி விருது எல்லாம் வென்றுள்ளீர்கள்... ஆனால் தமிழில் எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என நீங்கள் எப்போது வருந்தியது உண்டா? என கேட்டபோது, “என்ன ஆகிவிட்டது என்றால்... எல்லாமே விதி தான்! நான் தெலுங்கில் பெள்ளி என்ற ஒரு படம் பண்ணேன். அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. 175 நாட்கள் ஓடியது. இங்கே அஜித் குமார் அவர்களின் SUPER STARDOM ஏறுகிறது. அவர் ஒரு படம் செய்து ஹிட் ஆகிறது. இரண்டாவது படம் ஹிட்டாகிறது. மூன்றாவது படம் அவள் வருவாளா பண்றாரு, அதுவும் 100 நாள் ஓடியது. அந்த காலகட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் பிரசாந்த், விஜய், சூர்யா, அஜித் இந்த மாதிரி ஹீரோக்களுடன் எனக்கு 13 படங்கள் இருந்தன. அவர்களுக்கு அந்த குறிப்பிட்ட தேதியில் தான் ஹீரோக்கள் இருப்பார்கள். அந்த சமயத்தில் தமிழா - தெலுங்கா என்ற சந்தேகம் இருந்தபோது தெலுங்கில் நாம் ஏற்கனவே ஒப்புக்கொண்டோம். ஒரு கட்ட படப்பிடிப்பு நடித்து விட்டேன். இப்போது இங்கு திரும்பி வர முடியாது. இது மாதிரி நடக்கும்… சரி நாம் தெலுங்கு படங்கள் செய்து கொண்டிருக்கிறோமே தெலுங்கே பண்ணுவோம் என அங்க போனது இப்படி ஆகிவிட்டது. கொஞ்சம் சமாளித்து செய்து இருக்கலாம் ஆனால் செய்யவில்லை…” என பப்லு ப்ரித்வி ராஜ் பதிலளித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யங்கள் பகிர்ந்து கொண்ட பஃலு ப்ரித்வி ராஜின் அந்த முழு பேட்டி இதோ...
 

கமல் சார் மாதிரி ஆகணும்னு ஆசை... கதாநாயகனாக கண்ட கனவுகள் குறித்து மனம் திறந்த பப்லு ப்ரித்வி ராஜ்! வீடியோ உள்ளே
சினிமா

கமல் சார் மாதிரி ஆகணும்னு ஆசை... கதாநாயகனாக கண்ட கனவுகள் குறித்து மனம் திறந்த பப்லு ப்ரித்வி ராஜ்! வீடியோ உள்ளே

ஒரே நாளில் 4 படங்களின் அதிரடி அறிவிப்புகள்... சித்தார்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை இதோ!
சினிமா

ஒரே நாளில் 4 படங்களின் அதிரடி அறிவிப்புகள்... சித்தார்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை இதோ!

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்... பிரம்மாண்டமான இந்தியன் 2 பட அட்டகாசமான அப்டேட் இதோ!
சினிமா

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்... பிரம்மாண்டமான இந்தியன் 2 பட அட்டகாசமான அப்டேட் இதோ!