“இப்படிதான் அந்த Blue tick போச்சு..” பொன்னியின் செல்வன் பட நடிகர்கள் திரிஷா, ஜெயம் ரவி பகிர்ந்த தகவல் – விவரம் இதோ..

ட்விட்டரில் ப்ளு டிக் இழந்தது குறித்து நடிகர்கள் திரிஷா, ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்  - PS 2 stars about their blule tick in Twitter issue | Galatta

இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான  திரைப்படம் பொன்னியின் செல்வன். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று உலகளவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது., இதனையடுத்து லைகா தயாரிப்பில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதற்கான இறுதிகட்ட விளம்பர வேலையில் படக்குழு இறங்கியுள்ளது. அதற்காக படத்தின் நடிகர்களான ஜெயம் ரவி, சியான் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, கார்த்தி உள்ளிட்டோர் இந்தியா முழுவதும் சுற்று பயணம் சென்றுள்ளனர். அதில் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த படக்குழுவினர் பொன்னியின் செல்வன் படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இதில். பொன்னியின் செல்வன் படத்திற்கு விளம்பரத்திற்காக முதல் பாகத்திற்கு செய்ததை போல் இரண்டாம் பாகத்திற்கு தங்களது கதாபாத்திரங்களின் பெயரை மாற்ற முயன்று ட்விட்டர் ப்ளு டிக்கை பரி கொடுத்தது குறித்து நடிகர்களான திரிஷா. ஜெயம் ரவி ஆகியோர் அளித்த விளக்கம்,

முதலில் இது குறித்து பேசிய திரிஷா, “’நாங்கள் அனைவரும் எங்கள் பெயர்களை டிவிட்டரில் மாற்றவுள்ளதாக இருந்தோம். அதிக ஆர்வத்தில் நானும் ரவியும் அதை முதலில் செய்தோம். பின் எங்கள் ப்ளூ டிக் பறிபோனது. எனக்கு அதன் பிண்ணனி என்ன என்று தெரியாது. ப்ளு டிக் கொண்டு வர குழு வேலை செய்து வருகிறது.  டிவிட்டர் வரைமுறை என்று நான் நினைக்கின்றேன்." என்றார் நடிகை திரிஷா. தொடர்ந்து சியான் விக்ரம் வேடிக்கையாக  பத்திரிக்கையாளரிடம், "நீங்கள் எதாவது இவர்களுக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும் " என்றார்.

பின் ஜெயம் ரவி இது குறித்து, "நாங்கள் இப்போது எங்கள் கதாபாத்திரத்திரங்களின் சரிபார்ப்பில் இருக்கிறோம். பின் எங்கள் பெயர் சரிபார்ப்பை பார்ப்போம்" பின் தொடர்ந்து நடிகை திரிஷா,  “நாங்கள் எங்கள் பெயரை மாற்றியதால் ப்ளு டிக் வாங்க அனுமதிக்க மறுக்கிறார்கள். இன்று காலையும் அதைச் செய்ய முயற்சித்தோம். நாங்கள் எங்கள் பெயர்களை மாற்றியதால் டிவிட்டர் வரைமுறையில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு என்று கூறுகிறது."  என்று விளக்கமளித்தார் நடிகை திரிஷா.

சமீப காலமாக ட்விட்டரில் ஏற்பட்ட நிறைய மாறுதல்கள் புதிய வரைமுறை வரம்புகள் பயனாளர்களை எரிச்சலைடைய செய்து வருகிறது. அதன்படி நிறைய கணக்குகள் முடக்கப்படுவது ப்ளு டிக் அன்கீகாரதிர்க்கு மாத சந்தா என்று நிறைய விதிமுறைகளை ட்விட்டர் நிறுவனம் விதித்துள்ளது. இந்த வரம்பில் பொன்னியின் செல்வன் பட நடிகர்கள் திரிஷா மற்றும் ஜெயம் ரவி சிக்கியுள்ளனர். விரைவில் இருவரது ட்விட்டர் கணக்கிலும் ப்ளு டிக் மீண்டும் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் நண்பன் பட நடிகை இலியானா.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துகள் – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் நண்பன் பட நடிகை இலியானா.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துகள் – வைரலாகும் பதிவு இதோ..

சினிமா

"பேச்சை குறை வேலைய பாரு.." தோல்வி படங்களில் நடித்தது குறித்து நடிகர் விமல் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் - அட்டகாசமான நேர்காணல் இதோ..

சினிமா

"கூத்து பட்டறையில் இருக்கும்போதே.." விஜய் சேதுபதி குறித்து மனம் திறந்த நடிகர் விமல்.. - சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ..