அயோக்யா - தெலுங்கு டெம்பர் படத்தின் ரீமேக் படம் என்பது அனைவரும் அறிந்ததே, விஷால் நடித்திருக்கிறார் என்பதலால் நல்ல ஒப்பனிங் கிடைத்துள்ளது. முதல் முறை நடிகை ராஷி கண்ணாவுடன் இனைந்து நடித்துள்ளார் நடிகர் விஷால். இதை அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். 

Ayogya Spoiler Free Review By Galatta In Tamil Featuring Puratchi Thalapathy Vishal In Lead

இயக்குனர் மற்றும் KS ரவிக்குமாருக்கு மிகப்பெரிய சல்யூட். காதர் என்ற கான்ஸ்டாப்பில் பாத்திரத்தில் அசத்தலான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.

Ayogya Spoiler Free Review By Galatta In Tamil Featuring Puratchi Thalapathy Vishal In Lead

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து அதற்கான தீர்வையும் சொல்லும் படமாக இருந்தது. இந்த பிரச்சனைக்கு ஒரு பொறுப்பற்ற காவல் அதிகாரி எப்படி தீர்வு காண்கிறார் என்பதே இதன் கதை சுருக்கம்.

Ayogya Spoiler Free Review By Galatta In Tamil Featuring Puratchi Thalapathy Vishal In Lead

அதாவது, பெண்களை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஆண்களுக்கு உடனடியாக தண்டனை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்குறி எழுகிறது. இதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா? இல்லை புதிய சட்டம் இயற்றப்படுமா? என்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Ayogya Spoiler Free Review By Galatta In Tamil Featuring Puratchi Thalapathy Vishal In Lead

ரீமேக் தானே என்ற அசால்ட்டாக கையாளாமல், அதை முறையாக செய்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் மோகன். நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனுக்கே உரித்தான குண்டக்க மண்டக்க ஸ்டைலில் கூலான வில்லனாக கலக்கியிருக்கிறார்.

Ayogya Spoiler Free Review By Galatta In Tamil Featuring Puratchi Thalapathy Vishal In Lead

சாம் CS-ன் இசை வெகு நாட்களுக்கு பிறகு நன்றாக அமைந்தது. குறிப்பாக கண்ணே கண்ணே பாடல் செவிகளுக்கு இனிமையாக இருந்தது. மொத்தத்தில் சம்மர் சீசனுக்கு ஏற்ற ஒரு கமெர்ஷியல் படம் இந்த அயோக்யா

கலாட்டா ரேட்டிங் - 2.75/5