காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் அதுல்யா.தன்னுடைய முதல் படத்திலேயே பல இளைஞர்களின் இதயங்களை கொள்ளையடித்த இவர் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வெகு விரைவில் அவதரித்தார்.தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் அதுல்யா.

அதுல்யாவுக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இவருடைய போட்டோக்கள்,விடீயோக்கள் என்று ரசிகர்கள் தினமும் ஏதேனும் ஒன்றை எடிட் செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு விடுவார்கள்.இவரது நடிப்பில் வெளியான சுட்டுப்பிடிக்க உத்தரவு,கேப்மாரி,நாடோடிகள் 2,அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அடுத்ததாக சாந்தனு ஹீரோவாக நடிக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் அதுல்யா.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்லாவே வரவேற்பை பெற்றிருந்தது.சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகைகளில் சிலர் அதுல்யா.அவ்வப்போது லைவ் ஆக வந்து ரசிகர்களுடன் கலந்துரையாடுவார்.

கொரோனா நேரத்தில் அவ்வப்போது தனது புகைபடங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் அதுல்யா.நடனத்திலும்,உடற்பயிற்சிலும் ஆர்வம் கொண்டவரான அதுல்யா அவ்வப்போது தனது நடன மற்றும் ஒர்க்கவுட் வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.தற்போது தனது நடன வீடியோ ஒன்றை ஜோஷ் என்ற ஆப்பில் பதிவிட்டுள்ளார் அதுல்யா.அல்லு அர்ஜுனின் சமீபத்திய வைரல் பாடலான புட்டபொம்மா பாடலுக்கு நடனமாடும் இந்த வீடியோ வைரலாஜிவ் வருகிறது.