அசுரன் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அமைந்த சண்டை காட்சி உருவான விதம் குறித்து ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் கலாட்டா குழுவுடன் பகிர்ந்துகொண்டார்.

அசுரன் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது என தகவல் தெரியவந்தது. தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். கலைப்புலி S தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இந்த படமும் தனி சிறப்பை பெற்றது.

தனுஷ் இரண்டு கெட்டப்பில் நடித்த இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார் மேலும் நடிகர் கென் கருணாஸ், அம்மு அபிராமி, டீ.ஜே ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர் என்பது நாம் அறிந்தவையே.