தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் இல்லாத நடிகர் என்றால் அது ஆர்யா தான். தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தற்போது எனிமி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆர்யா கொண்ட போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது. விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் டெடி. திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயீஷா ஜோடியாக நடித்துள்ள முதல் படம் இது. கடைசியாக சூர்யா நடித்த காப்பான் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இயக்குனர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்துவிட்டன. கொரோனா அச்சுறுத்தலினால் வெளியாகாமல் இருந்தது. ஊரடங்கு சமயத்தில் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், திரையரங்குகள் திறக்கப்பட்டதால் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் பெரும் விலை கொடுத்து டெடி படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இதன் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆர்யாவுடன் இணைந்து டெடி செய்யும் சேட்டை சபாஷ். மார்ச் 12-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்தனர். 

படத்தின் பாடல்கள் என் இனிய தனிமையே மற்றும் நண்பியே பாடல் வீடியோவை தொடர்ந்து தற்போது ரிலீஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

இந்த படத்தையடுத்து பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை எனும் படத்தில் நடித்தார் ஆர்யா. இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. சார்பட்டா பரம்பரை படத்தில் வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.