தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ வெளியானது.

தொடர்ந்து நடிகர் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்த எனிமி திரைப்படம் அடுத்து வெளிவர தயார் நிலையில் உள்ளது. இத்திரைப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். அடுத்ததாக நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் அரண்மனை 3.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சுந்தர்.சி.  தமிழ் ரசிகர்களின் மிகவும் அபிமானமான இயக்குனர்களில் ஒருவர். சுந்தர்.சி.-ன் மாஸ் கமர்ஷியல் காமெடி திரைப்படங்களுக்கு என்று எப்போதும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த வகையில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை சீரிஸ் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அவ்னி சினி மேக்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுந்தர்.சி  இயக்கும் அரண்மனை 3 படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, யோகிபாபு, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் உட்பட பலர் நடித்துளஅளனர். இசையமைப்பாளர் சி.சத்யா இசையில் உருவாகியிருக்கும் அரண்மனை3 படத்திலிருந்து புதிய பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த கலக்கலான ரடடபட்டா பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.