தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்ட நடிகர் அருண் விஜய்.இவர் நடிப்பில் அடுத்து வரவுள்ள திரைப்படம் தடம். தடையற தாக்க படத்தை இயக்கி அருண் விஜய்க்கு என்று ஒரு பெயரை பெற்று தந்த மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார்.

Arun Vijay Director Magizh Thirumeni Thadam Movie Censor Certificate and Run Time Revelaed March First Theatrical Reelase Planned

தன்யா ஹோப் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.வித்யா பிரதீப் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அருண் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

Arun Vijay Director Magizh Thirumeni Thadam Movie Censor Certificate and Run Time Revelaed March First Theatrical Reelase Planned

இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து தற்போது சென்சார் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.படத்திற்கு யு /ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் படத்தின் நீளம் 2 மணி நேரம் 18 நிமிடங்கள் என்றும் அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Arun Vijay Director Magizh Thirumeni Thadam Movie Censor Certificate and Run Time Revelaed March First Theatrical Reelase Planned

இந்த படத்தில் அருண் விஜய் முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.தடையற தாக்க படத்தை அடுத்து அருண் விஜய் இயக்குனர் மகிழ் திருமேனி இருவரும் இணையும் படம் என்பதால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.