தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்ட நடிகர் அருண் விஜய்.இவர் நடிப்பில் அடுத்து வரவுள்ள திரைப்படம் தடம். தடையற தாக்க படத்தை இயக்கி அருண் விஜய்க்கு என்று ஒரு பெயரை பெற்று தந்த மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.அப்போது பேசிய அருண் விஜய் டைரக்டர் என்னை முத்தக்காட்சியில் நடிக்க சொன்னார் நான் முடியாது என மறுத்துவிட்டேன் என கூறினார்.அதனை குறுக்கிட்டு பேசிய படத்தின் இயக்குனர் .பிடிக்காமல் நடித்து தான் 13 டேக் எடுத்து ஹீரோயினின் உதடை கடித்துவிட்டார் என கூற விழாவே கலகலப்பானது.

இந்த படம் பிப்ரவரி 22ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.தடம் திரைப்படம் மறுபடியும் அருண் விஜய் - மகிழ் திருமேனி இருவருக்கும் வெற்றியை தரும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு உள்ளனர் .