நெருப்பு டா பாடலின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் அருண்ராஜா காமராஜ். திரை துறையில் நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்தவர் கனா படத்தில் இயக்குனராக களமிறங்கி பட்டையை கிளப்பினார். 

Arun Raja Kamaraj Shared A Pic With SK His Close Friend

கல்லூரி காலம் துவங்கி இன்று வரை நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் கூட. அருண்ராஜாவின் அசுர வளர்ச்சியில் அவரது நண்பர் சிவகார்த்திகேயனுக்கும் பங்குண்டு.

Arun Raja Kamaraj Shared A Pic With SK His Close Friend

தற்போது ட்விட்டரில் சிவாவுடன் சேர்ந்திருக்கும் செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அருண்ராஜா. அதில் தோழனின் தோள்களும் அன்னைமடி என்ற கேப்ஷனை குறிப்பிட்டுள்ளார். அவ்வரிகள் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் இடம்பெற்றுள்ளது.

Arun Raja Kamaraj Shared A Pic With SK His Close Friend

இதை கண்ட ரசிகர்கள், விரைவில் நடிகர் சிவகார்திகேயன் வைத்து அருண்ராஜா படம் இயக்க வேண்டும் என்ற அன்பு நிறைந்த கோரிக்கையை முன்வைத்தனர். இந்த நட்பு வாழ்நாள் முழுவதும் நீடிக்க கலாட்டா சார்பில் வாழ்த்துக்களை பதிவு செய்கிறோம்.

Arun Raja Kamaraj Shared A Pic With SK His Close Friend