நடிகை ராதிகாவின் பேத்தி... இந்த கிரிக்கெட் வீரரின் மகளா!- சோசியல் மீடியாவில் வைரலாகும் க்யூட்டான புகைப்படங்கள் இதோ!

நடிகை ராதிகா சரத்குமார் தனது பேத்தி பிறந்தநாளுக்கு வெளியிட்ட வீடியோ,radhika sarathkumar shared reels video of her grandchild | Galatta

இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற நடிகைகளில் ஒருவராக காலம் கடந்து மக்கள் மனதில் வாழும் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ராதிகா சரத்குமார். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக களமிறங்கிய நடிகை ராதிகா சரத்குமார், தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள், பாமா ருக்மணி, இன்று போய் நாளை வா, போக்கிரி ராஜா, ரங்கா, மூன்று முகம், தாவணிக் கனவுகள், நல்லவனுக்கு நல்லவன், சிப்பிக்குள் முத்து, இரட்டைவால் குருவி, பாசப்பறவைகள், பூந்தோட்ட காவல்காரன், கிழக்குச் சீமையிலே, வில்லாதி வில்லன், ராசையா, சூரியவம்சம், ஜீன்ஸ், தாஜ்மஹால், அமர்க்களம், சகுனி, நானும் ரவுடிதான், தங்க மகன், தெறி, தர்மதுரை, மிஸ்டர் லோக்கல், வானம் கொட்டட்டும், அனபெல் சேதுபதி என அன்று முதல் இன்று வரை பல்வேறு விதமான திரைப்படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் பலவிதமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் இதயங்களை கொள்ளை அடித்து வருகிறார்.

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய்க்கு கதாநாயகனாக நடித்த யானை, அதர்வாவின் குருதி ஆட்டம், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த வெந்து தணிந்தது காடு, இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே, இயக்குனர் சற்குணம் இயக்கிய பட்டத்து அரசன் உள்ளிட்ட திரைப்படங்களில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்திருந்தார். தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டிலும் தொடர்ச்சியாக ராதிகா சரத்குமார் நடிப்பில் அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர உள்ளன. முதலாவதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த க்ரைம் திரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் கொலை படத்தில் ரேகா எனும் கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகை ராதிகா, நடிகை காஜல் அகர்வால் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்த ஹாரர் காமெடி திரைப்படமாக அடுத்த சில தினங்களில் வெளிவர இருக்கும் கோஸ்டி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். அந்த வகையில் தெலுங்கில் ஆபரேஷன் ராவண், ஹிந்தியில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வரும் மேரி கிறிஸ்மஸ் ஆகிய படங்களிலும் ராதிகா நடித்து வருகிறார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் நடித்த சித்தி மெகா தொடர் எப்போதுமே மெகா தொடர்களின் ராணியாக திகழ்கிறது. தொடர்ந்து அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி, சந்திரகுமாரி, சித்தி 2 ஆகிய மெகா தொடர்களில் அசத்திய நடிகை ராதிகா சரத்குமார் தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி C/o ராணி மெகா தொடரில் நடித்து வருகிறார். 

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய இடத்தில் ராதிகா நடிக்கிறார். இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்த கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கும் சந்திரமுகி 2 படத்தில் வைகை புயல் வடிவேலுவின் முக்கிய இடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நடிகை ராதிகா சரத்குமார் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரயேன் ஹார்டி கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை திருமணம் செய்து கொண்டார். கர்நாடகாவை சேர்ந்த அபிமன்யு மிதுன் இந்திய அணிக்காக கடந்த 2010-2011-ம் ஆண்டுகளிலும், ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக 2018 வரையும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது பேத்தியும் அபிமன்யு மிதுனின் மகளுமான செல்லக்குட்டி ராதியாவின் பிறந்தநாளுக்கு, வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில்,ராதியாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒன்றிணைந்த ஒரு ரீல்ஸ் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராதிகா சரத்குமார் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Radikaa Sarathkumar (@radikaasarathkumar)

வர்த்தகத்தில் தளபதி விஜயின் லியோ படத்தை சூர்யா42 தாண்டியதா? சரியான விளக்கம் கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்! வீடியோ உள்ளே
சினிமா

வர்த்தகத்தில் தளபதி விஜயின் லியோ படத்தை சூர்யா42 தாண்டியதா? சரியான விளக்கம் கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்! வீடியோ உள்ளே

'இது என்னை இன்னும் பொறுப்பாக்குகிறது!'- இதயத்திலிருந்து நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ்... தளபதி விஜயுடன் இருக்கும் புது புகைப்படம் இதோ!
சினிமா

'இது என்னை இன்னும் பொறுப்பாக்குகிறது!'- இதயத்திலிருந்து நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ்... தளபதி விஜயுடன் இருக்கும் புது புகைப்படம் இதோ!

சினிமாவில் நடன இயக்குனராக வர MBBS எதற்கு..? நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டரின் மகள் அக்ஷதாவின் விளக்கம் இதோ!
சினிமா

சினிமாவில் நடன இயக்குனராக வர MBBS எதற்கு..? நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டரின் மகள் அக்ஷதாவின் விளக்கம் இதோ!