இறுதி கட்டத்தில் ராகவா லாரன்ஸின் பிரம்மாண்டமான சந்திரமுகி 2... செம்ம அப்டேட் கொடுத்த கங்கனா ரனாவத்! வைரல் புகைப்படங்கள் இதோ

ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 படப்பிடிப்பை நிறைவு செய்த கங்கனா ரனாவத்,Kangana ranaut completes her part of shoot in chandramukhi 2 | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரை பயணத்தில் குறிப்பிடப்படும் திரைப்படங்களில் ஒன்றாக விளங்கும் திரைப்படம் சந்திரமுகி. முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பணக்காரன், மன்னன், உழைப்பாளி போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பி.வாசு பாபா திரைப்படத்திற்கு பிறகு சிறு இடைவெளி எடுத்துக்கொண்ட சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த பிளாக்பஸ்டர் திரைப்படமாக, மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான மணிசித்திரதாழ் திரைப்படத்தின் ரீமேக்காக சந்திரமுகி திரைப்படத்தை இயக்கினார்.  இன்றைய சூழலில் அடுக்கடுக்காக பல ஹாரர் காமெடி திரைப்படங்கள் தொடர்ந்து ட்ரெண்டாகி வருவதற்கு முதற்படியாக அமைந்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சந்திரமுகி.

அனைத்து தரப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி வருகிறது. நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரமான சந்திரமுகி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக முன்னணி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி 2 படப்பிடிப்பு தன் பகுதி படப்பிடிப்பை தற்போது நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சந்திரமுகி படப்பிடிப்பில் எனது கதாபாத்திரத்தை நிறைவு செய்துள்ளேன். இந்தத் தருணத்தில் இங்கே நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களுக்கு விடைபெறுகிறேன் என சொல்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. மிகவும் அன்பான ஒரு படக்குழு எனக்கு கிடைத்திருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ் சார் அவர்களுடன் இருக்கும் எந்த புகைப்படம் இதுவரை என்னிடம் இல்லை. ஏனென்றால் எப்போதுமே நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஷூட்டிங்கிற்கான உடையிலேயே இருப்போம். அதனால் இன்று காலை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக அவரிடம் கேட்டு எனக்காக ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். லாரன்ஸ் மாஸ்டர் என மிக பிரபலமாக திகழும் ராகவா லாரன்ஸ் சாரால் நான் மிகவும் ஊக்கம் அடைந்து இருக்கிறேன். அவர் ஆரம்பத்தில் தனது பயணத்தை நடன கலைஞராகவும் நடன இயக்குனராகவும் தொடங்கினார். ஆனால் இன்று அவர் பிளாக்பஸ்டர் ஃபிலிம் மேக்கர் / சூப்பர் ஸ்டார். அற்புதமான மனிதர். உங்களின் அன்பிற்கும், அட்டகாசமான நகைச்சுவை உணர்விற்கும் என்னுடைய பிறந்த நாளுக்காக அட்வான்ஸாக முன்பே நீங்கள் கொடுத்த பரிசுகளுக்கும் மிக்க நன்றி லாரன்ஸ் சார். உங்களோடு பணியாற்றிய இந்தக் காலம் மிகவும் சிறப்பானது.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத் தற்போது தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள நிலையில் விரைவில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இந்த கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் சந்திரமுகி 2 திரைப்படம் விரைவில் தயாராகி வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி 2 படப்பிடிப்பில் ராகவா லாரன்ஸ் உடன் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் மற்றும் பதிவு இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

'சிலம்பரசன்TR ரசிகர்களே தயாரா?'- ஆவலோடு காத்திருந்த பத்து தல பட பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா அறிவிப்பு இதோ!
சினிமா

'சிலம்பரசன்TR ரசிகர்களே தயாரா?'- ஆவலோடு காத்திருந்த பத்து தல பட பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா அறிவிப்பு இதோ!

வர்த்தகத்தில் தளபதி விஜயின் லியோ படத்தை சூர்யா42 தாண்டியதா? சரியான விளக்கம் கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்! வீடியோ உள்ளே
சினிமா

வர்த்தகத்தில் தளபதி விஜயின் லியோ படத்தை சூர்யா42 தாண்டியதா? சரியான விளக்கம் கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்! வீடியோ உள்ளே

'இது என்னை இன்னும் பொறுப்பாக்குகிறது!'- இதயத்திலிருந்து நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ்... தளபதி விஜயுடன் இருக்கும் புது புகைப்படம் இதோ!
சினிமா

'இது என்னை இன்னும் பொறுப்பாக்குகிறது!'- இதயத்திலிருந்து நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ்... தளபதி விஜயுடன் இருக்கும் புது புகைப்படம் இதோ!