உதயநிதி ஸ்டாலினின் அடுத்த அதிரடியான கண்ணை நம்பாதே... ரொமான்டிக்கான காத்திரு பாடலின் லிரிக் வீடியோ இதோ!

உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே பட காத்திரு பாடல் வெளியீடு,udhayanidhi stalin in kannai nambathey movie kaathiru song | Galatta

அரசியல் - சினிமா என இரண்டிலும் தனது பணியை மிகச் சிறப்பாக செய்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அடுத்து தொடர்ந்து மக்கள் பணியாற்றி வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் தமிழ்நாடு அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனிடையே தனது திரை பயணத்தையும் தொடர்ந்த உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் நெஞ்சுக்கு நீதி மற்றும் கலகத் தலைவன் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.


முன்னதாக பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய படங்களை இயக்கி பெரும் கவனம் ஈர்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கதாநாயகனாக நடித்த திரைப்படம் மாமன்னன். தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் மாமன்னன் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாமன்னன் திரைப்படம் தான் தனது திரைப் பயணத்தில் நடிகராக கடைசி திரைப்படம் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதனிடையே உதயநிதி ஸ்டாலின் அடுப்பில் அடுத்த அதிரடி திரைப்படமாக வெளிவர தயாராகியுள்ள திரைப்படம் கண்ணை நம்பாதே. முன்னதாக அருள்நிதி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து நடிகை ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க, ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா, வசுந்தரா கஸ்யப், சதீஷ், மாரிமுத்து, சுபிக்ஷா கிருஷ்ணன், பழ.கருப்பையா, சென்ராயன் உள்ளிட்டோர் கண்ணை நம்பாதே திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். LIPI CINE CRAFTS தயாரிப்பில் உருவாகி இருக்கும் கண்ணை நம்பாதே திரைப்படத்தில் ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, சித்து குமார் இசை அமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் கண்ணை நம்பாதே திரைப்படம் வருகிற மார்ச் 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.இந்நிலையில் கண்ணை நம்பாதே திரைப்படத்திலிருந்து காத்திரு எனும் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. ரொமான்டிக்கான அந்த பாடல் இதோ…
 

'இது என்னை இன்னும் பொறுப்பாக்குகிறது!'- இதயத்திலிருந்து நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ்... தளபதி விஜயுடன் இருக்கும் புது புகைப்படம் இதோ!
சினிமா

'இது என்னை இன்னும் பொறுப்பாக்குகிறது!'- இதயத்திலிருந்து நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ்... தளபதி விஜயுடன் இருக்கும் புது புகைப்படம் இதோ!

சினிமாவில் நடன இயக்குனராக வர MBBS எதற்கு..? நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டரின் மகள் அக்ஷதாவின் விளக்கம் இதோ!
சினிமா

சினிமாவில் நடன இயக்குனராக வர MBBS எதற்கு..? நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டரின் மகள் அக்ஷதாவின் விளக்கம் இதோ!

'ரஞ்சிதமே பாடலை இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்!'- அதிரடியான பதிலளித்த முன்னணி நடன இயக்குனரின் மகள்! வீடியோ இதோ
சினிமா

'ரஞ்சிதமே பாடலை இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்!'- அதிரடியான பதிலளித்த முன்னணி நடன இயக்குனரின் மகள்! வீடியோ இதோ