'சிலம்பரசன்TR ரசிகர்களே தயாரா?'- ஆவலோடு காத்திருந்த பத்து தல பட பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா அறிவிப்பு இதோ!

சிலம்பரசன்TRன் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு,silambarasan tr in pathu thala movie audio launch announcement | Galatta

தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகராக ஜொலிக்கும் நடிகர் சிலம்பரசன்.TR மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனது அடுத்தடுத்த திரைப்படங்களை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - சிலம்பரசன்TR - ARரஹ்மான் வெற்றிக் கூட்டணியில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கதையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது வழக்கமான டிராக்கில் இருந்து விலகி யாரும் எதிர்பாராத தரமான கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக தனது திரைப் பயணத்தில் 48வது திரைப்படமாக சிலம்பரசன்.TR நடிக்கும் அடுத்த புதிய படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக STR48 திரைப்படத்தை சிலம்பரசன்.TR அவர்களே இயக்கி நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அல்லது சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தபடி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் ஜுங்கா ஆகிய படங்களின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படமாகவும் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி STR48 படத்தை இயக்குகிறார் என கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே சிலம்பரசன்.TR நடிப்பில் அடுத்த பக்கா மாஸ் திரைப்படமாக தயாராகி இருக்கும் திரைப்படம் பத்து தல. முன்னதாக கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக தயாராகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் AG.ராவணன் எனும் AGR கதாபாத்திரத்தில் சிலம்பரசன்.TR நடித்துள்ளார். சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்து தல திரைப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். PEN STUDIOS வழங்கும் பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 18ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 5 மணி அளவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

The Mega-Grand Audio Launch of #Atman @SilambarasanTR_ @Gautham_Karthik starrer #PathuThala is all set to get bigger!

March 18 from 5PM onwards at Nehru Indoor Stadium Chennai.

An @arrahman musical
🎬 @nameis_krishna
Produced by @jayantilalgada @Kegvraja pic.twitter.com/fm0z7CcNCM

— Studio Green (@StudioGreen2) March 14, 2023

சினிமாவில் நடன இயக்குனராக வர MBBS எதற்கு..? நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டரின் மகள் அக்ஷதாவின் விளக்கம் இதோ!
சினிமா

சினிமாவில் நடன இயக்குனராக வர MBBS எதற்கு..? நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டரின் மகள் அக்ஷதாவின் விளக்கம் இதோ!

'ரஞ்சிதமே பாடலை இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்!'- அதிரடியான பதிலளித்த முன்னணி நடன இயக்குனரின் மகள்! வீடியோ இதோ
சினிமா

'ரஞ்சிதமே பாடலை இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்!'- அதிரடியான பதிலளித்த முன்னணி நடன இயக்குனரின் மகள்! வீடியோ இதோ

சூர்யாவின் பிரம்மாண்டமான சூர்யா42 பட அதிரடியான ப்ரோமோ ரிலீஸ் குறித்து பரவும் தகவல்கள்... விளக்கமளித்த முன்னணி தயாரிப்பாளர்!
சினிமா

சூர்யாவின் பிரம்மாண்டமான சூர்யா42 பட அதிரடியான ப்ரோமோ ரிலீஸ் குறித்து பரவும் தகவல்கள்... விளக்கமளித்த முன்னணி தயாரிப்பாளர்!