லேடி ஜாக்கி சான்.. சூர்யாவின் ‘கங்குவா’ பட நடிகையின் அட்டகாசமான சண்டை பயிற்சி.. – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..

அட்டகாசமான சண்டை பயிற்சியில் கங்குவ பட நடிகை வைரல் வீடியோ உள்ளே - Kanguva actress Disha patani stunt video | Galatta

அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு படம் வேறுபாடுகளை தன் நடிப்பின் மூலம் கொடுத்து ரசிகர்களை உற்சாகப் படுத்தும் நடிகர் சூர்யா. கடந்த சில ஆண்டுகளாக சூர்யாவின் திரைபயணம் ஒவ்வொன்றும் வெற்றி படிக்கட்டுகளாக அமைந்து ஒரு நடிகராக தனக்கான உயரத்தை படத்திற்கு படம் உயர்த்தி கொண்டே வருகிறார். முன்னதாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை சூரரைப் போற்று திரைப்படத்திற்காக பெற்றார். பின் ஜெய் பீம் திரைப்படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தார். பின் நீண்ட ஆண்டுகளுக்கு பின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் மூலம் திரையரங்குகளில் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் மூழ்கடித்தார். அதனை தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் இறுதி காட்சியில் ‘ரோலக்ஸ்’ ஆக என்ட்ரி கொடுத்து ஒட்டு மொத்த திரையுலகினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பின்  நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடைபெற்றது. சில காரணங்களினால் அந்த திரைப்படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது விரைவில் அந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இதனிடையே இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமானார். மிகப்பிரம்மாண்டமாக வரலாற்று புனைவு கதையின் அடிப்படையில் உருவாகும் இப்படத்திற்கு ‘கங்குவா’ என்று பெயரிட்டுள்ளது படக்குழு. இப்படத்திற்கு வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் பிரபல பாடலாசிரியர் மதன் கார்கி படத்திற்கு வசன கர்த்தாவாக பணியாற்றி வருகிறார்.  நடிகர் சூர்யாவின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பொருட்ச் செலவில் மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாகவுள்ள கங்குவா திரைப்படம் முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அடுத்த ஆண்டு இறுதியில் 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.   

படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை தீஷா பத்தானி அவர்கள் தீவிரமாக சண்டை பயிற்சி எடுக்கும் வீடியோவினை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தரையில் முழுமையாக கால் படாமல் பறந்து பறந்து பயிற்சியாளருடன் சண்டையிடும் காட்சி ரசிகர்களை அதிகம் கவர்ந்து வைரலாகி வருகிறது. முன்னதாக சோலோவாக பயிற்சி எடுக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் ரசிகர்கள் இந்த பயிற்சி சூர்யாவின் கங்குவா படத்திற்காக இருக்க கூடுமோ என்ற உற்சாகத்தில் எதிர்பார்ப்பை அதிகம் வளர்த்து வருகின்றனர்.

 

🙃 pic.twitter.com/oM4SVRqPE5

— Disha Patani (@DishPatani) April 28, 2023

அமெரிக்காவில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம்.. வியந்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

அமெரிக்காவில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம்.. வியந்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ இதோ..

“ஏன் தளபதி விஜய் அவர்களை சந்திக்க போகல..” ரசிகர்கரின் கேள்விக்கு எஸ் ஜே சூர்யாவின் பதில்.. - இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“ஏன் தளபதி விஜய் அவர்களை சந்திக்க போகல..” ரசிகர்கரின் கேள்விக்கு எஸ் ஜே சூர்யாவின் பதில்.. - இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..

‘வாத்தி’ பட தயாரிப்பாளரின் அடுத்த திரைப்படம் .. பிரபல ஹீரோவுடன் கூட்டணி – இணையத்தில் வைரலாகும் அட்டகாசமான அப்டேட்...
சினிமா

‘வாத்தி’ பட தயாரிப்பாளரின் அடுத்த திரைப்படம் .. பிரபல ஹீரோவுடன் கூட்டணி – இணையத்தில் வைரலாகும் அட்டகாசமான அப்டேட்...