நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. காலை துவங்கிய இந்த வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Arnab Goswami Gets Trolled For Mentioning Sunnyleone In Live During Election Results

இந்தத் தேர்தலில் பல பிரபலங்களைக் களத்தில் இறக்கியுள்ளது அரசியல் கட்சிகள். கிரிக்கெட்டர் கௌதம் கம்பீர், பாலிவுட் நடிகர் சன்னி தியோல் போன்ற பலர் அந்தக் கட்சியில் நட்சத்திர வேட்பாளர்களாக உள்ளனர். இதற்கிடையில் இன்றைய வாக்கு எண்ணிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் அனைத்து மீடியாக்களும் மும்முரம் காட்டி வருகிறது.

Arnab Goswami Gets Trolled For Mentioning Sunnyleone In Live During Election Results

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் அர்னாப், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் நடிகர் சன்னி தியோல் முன்னிலையில் உள்ளார் எனக் கூறுவதற்குப் பதிலாக சன்னி லியோன் முன்னிலையில் உள்ளார் எனத் தவறுதலாகக் கூறிவிட்டார்.

இந்த வீடியோவை கவனித்த நடிகை சன்னி லியோன் ட்விட்டரில், நான் எத்தனை வாக்குகள் முன்னிலையில் உள்ளேன் என பதிவு செய்துள்ளார். இதை கவனித்த இணையதள வாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

Arnab Goswami Gets Trolled For Mentioning Sunnyleone In Live During Election Results