டோலிவுட்டில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே.

Arjun Reddy Remake Kabir Singh Teaser Released Featuring Shahid Kapoor In Lead

தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு `ஆதித்ய வர்மா' என தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் ஹிந்தியில் கபிர் சிங் என பெயரிடப்பட்டுள்ளது. ஷாஹித் கபூர் நாயகனாக நடிக்க, எம்.எஸ் தோணி படத்தின் நாயகி கைரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.

Arjun Reddy Remake Kabir Singh Teaser Released Featuring Shahid Kapoor In Lead

அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் வங்கா இயக்கும் இப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முசூரி, டெல்லி, மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கின்றன. மேலும் படம் வரும் 21 ஜூன் 2019 ஆம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.