தல அஜித் பற்றியோ அல்லது அவரது படங்கள் தொடர்பான எந்த ஒரு சிறிய செய்தி வெளிவந்தாலும் அதை பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி கொண்டாடுவார்கள் தல ரசிகர்கள். அந்த வகையில் நேற்று அஜித்தின் அடுத்து படமான தல 61 பற்றிய செய்தி ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலானது. வலிமை படத்திற்கு பிறகு தல அஜித், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் என செய்திகள் பரவியது. 

பீகில் படத்தினை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் தல 61 படத்தினை தயாரிக்க உள்ளார் எனவும் தகவல் பரவியது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் தெரிவித்து கூறியிருக்கிறார். அதில் நாங்கள் 2020ல் எந்த ப்ராஜெக்ட்டும் ஒப்பந்தம் செய்யவில்லை. சில பொய்யான செய்திகள் இணையத்தில் வலம் வருவதை பார்த்தேன். 

அதனால் அது குறித்து விளக்கம் அளிக்க விரும்பினேன் என்று பதிவு செய்துள்ளார். மேலும் நாங்கள் யாரையும் சந்திக்கவில்லை, இது பற்றி விவாதிக்கவும் இல்லை. நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம் என அர்ச்சனா கல்பாத்தி மற்றொரு பதிவில் தெளிவு செய்துள்ளார். 

ஏஜிஎஸ் நிறுவனம் சென்ற வருடம் தளபதி விஜய் வைத்து பிகில் திரைப்படத்தை தயாரித்தது. இந்த படம் பாக்ஸ் ஆஃபிசில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தால் நஷ்டம் என பரவிய செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் அவர் முன்பே விளக்கம் கூறி இருக்கிறார். மேலும் சென்ற வருடம் தமிழ் சினிமாவில் அதிகம் வசூலித்த படம் அது தான் எனவும் அவர் கூறி இருந்தார்.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பின் H.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் தல. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். வலிமை படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் ஷுட்டிங் நடந்தது. 

அதன் பின் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு போட பட்டதால் வலிமை படத்தின் ஷுட்டிங் தடைபட்டு இருக்கிறது. இயல்பு நிலை திரும்பிய பிறகு தான் ஷுட்டிங் துவங்க முடியும் என்கிற சூழ்நிலை உள்ளது. RX 100 திரைப்பட புகழ் கார்த்திகேயா, வலிமை படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி அடிக்கடி வருவதை காண முடிகிறது. படக்குழுவினர் தரப்பிலிருந்து இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. 

வலிமை திரைப்படத்தை இந்தியிலும் உருவாக்கி பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதால், இந்தி மொழியில் வலிமை படம் வெளியானாலும், நல்ல கலெக்‌ஷனை அள்ளும் என போனி கபூர் யோசனை செய்துள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின்றன. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.