தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்த இயக்குனர்களில் ஒருவர் கோபி நயினார். அறம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை இவர் இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் வட சென்னையில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் திறமை மற்றும் அந்த பகுதியில் வாழும் இளைஞர்களின் கால்பந்தாட்ட திறமையை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது.

ஜெய் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்றும். இவர்களுடன் டேனியல் அனி போப் மற்றும் கல்லூரி வினோத் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்ற செய்திகள் பேசப்பட்டு வந்தன.

தற்போது இப்படம் சில பல காரணங்களால் கைவிடப்பட்டதாம். நிச்சயமாக இச்செய்தி சினிமா விரும்பிகளுக்கு சோகமளிக்கும் என்றே கூறலாம்.