பாடல்கள் இல்லாத படம்? மணிரத்தினம் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview இதோ..

பாடல்கள் இல்லாத படம் குறித்து இயக்குனர் மணிரத்னம் பகிர்ந்த தகவல் வீடியோ உள்ளே - Maniratnam about songless film | Galatta

இந்திய சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரானவர் மணிரத்தினம். முதல் படம் தொடங்கி இன்று வரை வித்யாசமான கதைகளத்தை கொண்டு பல தசாப்தங்களாக ரசிகர்களை ஆச்சர்யத்தி வரும் ஜாம்பவனாக இருந்து வருகிறார். ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களை கதையில் உள்ளடக்கி அவர்களை கதாபாத்திரமாக வாழ வைத்து ரசிக்க வைப்பவர் இயக்குனர் மணிரத்னம். அதன்படி அவருடைய அடுத்த திரைப்படமாக வரும் ஏப்ரல் 28 ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 2. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில்

படம் குறித்தும் தன் திரைப்பயணம் குறித்தும் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்களுடனான வெற்றி கூட்டணி குறித்தும் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் பாடல்கள் இல்லாத படம் குறித்த எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு,

"எனக்கு எப்போதுமே பாடல் இல்லாத படம் பண்ண வேண்டும் என்று தான் நினைப்பேன். பாடல் என்பது தனி படத்தை இயக்குவது போன்றது. அந்த பாடல் நன்றாக வந்து அது வெளியானல் ரசிகர்கள் அந்த பாடலை கேட்டு படத்திற்கு வருவார்கள்.  ஒரு படத்தை இயக்கினால் அந்த படத்திற்கு பாடல் தேவைப்பட்டால் அதை உருவாக்கலாம். ஆனால் பாடல்கள் தான் படத்திற்கு முன்பே வெளியாகின்றது. அதனால் ரசிகர்கள் பாடலை கேட்டு விட்டு பின் படம் எப்படி இருக்கு என்று பார்க்க வருவார்கள். அவர்கள் ஏற்கனவே ஒரு எண்ணத்தோடு படத்திற்கு வருவார்கள். சில நேரம் அந்த பாடலை எப்படி படத்தோடு பொறுந்த வைப்பது என்றே தெரியாது. எல்லா பாடலும் ஒரு தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது போன்றது. பாடல் படமாக்க முதல் நாள் செல்லும் போது என்ன செய்யவேண்டும் என்றே தெரியாது. அவ்வளவு கடினாமாக இருக்கும்.  பின் எதையாவது தொடங்கி ஆரம்பிப்பேன். பாடல்கள் நிச்சயம் கடினாமானது." என்றார்.

அதற்கு முன்னதாக கடந்த 1993 ம் ஆண்டு மணிரத்னம் – ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் வெளியான திருடா திருடா படத்தில் இடம் பெற்ற ராசாத்தி பாடல் குறித்து மணிரத்னம் பேசியது, ராசாத்தி பாடல் பிரமாதமான பாடல். திருடா திருடா படத்தில் அது பொருந்தாது என்று எனக்கு தெரியும். அதனால் அவரிடம் சொன்னேன்.‌ இந்த பாடலை அடுத்த படத்திற்கு பயன்படுத்தலாம் என்று..  ஆனால் ஏஆர் ரகுமான் மற்றும் வைரமுத்து கட்டயாப்படுத்தினார்கள். அதை என்னால் முழுமையாக திரைப்படத்தில் நியாயப்படுத்த முடியவில்லை. நாங்கள் முயற்சி செய்தோம்." என்றார் மணிரத்னம்.

மேலும் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தனது 31 ஆண்டு கால திரைப்பயணம் குறித்து பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட வீடியோவை காண..

தீவிர சிகிச்சையில் பிரபல நடிகர் சரத் பாபு.. வருத்தத்தில் திரையுலகம்.. - விவரம் இதோ..
சினிமா

தீவிர சிகிச்சையில் பிரபல நடிகர் சரத் பாபு.. வருத்தத்தில் திரையுலகம்.. - விவரம் இதோ..

நறுமுகையே முதல் தேவராளன் ஆட்டம் வரை.. Period படங்களில் இசையின் முக்கியத்துவம் குறித்து ஏ ஆர் ரகுமான் பகிர்ந்த தகவல் – சுவாரஸ்யமான வீடியோ உள்ளே..
சினிமா

நறுமுகையே முதல் தேவராளன் ஆட்டம் வரை.. Period படங்களில் இசையின் முக்கியத்துவம் குறித்து ஏ ஆர் ரகுமான் பகிர்ந்த தகவல் – சுவாரஸ்யமான வீடியோ உள்ளே..

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட ரிலீஸ் தேதியை Super Cool போஸ்டருடன் அறிவித்த படக்குழு – ரசிகர்களால் வைரலாகும் அப்டேட் இதோ..
சினிமா

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட ரிலீஸ் தேதியை Super Cool போஸ்டருடன் அறிவித்த படக்குழு – ரசிகர்களால் வைரலாகும் அப்டேட் இதோ..