சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கலையொட்டி வெளியான தர்பார் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

Annaatthe Will Have 5 Songs Says D Imman

இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிவருகிறார்.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில்நயன்தாரா,சதிஷ்,சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Annaatthe Will Have 5 Songs Says D Imman

இந்த படம் 2021 பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.இந்த படத்தின் பாடல் குறித்து மார்ச் 29ஆம் தேதி நடைபெற்ற சன் சிங்கர் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளதென்றும்,3 பாடல்களுக்கான வேலைகள் முடிந்துவிட்டது என்றும் 2 பாடல்களுக்கான வேலைகள் உள்ளதென்றும் அவர் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.