இசையமைப்பாளராக இருந்து தனது வித்தியாசமான கதை தேர்வினால் ஹீரோவாக உயர்ந்து நிற்பவர் விஜய் ஆண்டனி.இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கொலைகாரன் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தமிழரசன்,அக்னி சிறகுகள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Vijay Antony Turns Story Writer For Pichaikaran 2

2016 விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் பிச்சைக்காரன்.சசி இந்த படத்தை இயக்கியிருந்தார்.இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது என்று பிரபல நாளிதழ் ஒன்றுக்கு விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

Vijay Antony Turns Story Writer For Pichaikaran 2

அவர் கூறியதாவது கடந்த நான்கு மாதங்களாக பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை எழுதிவருகிறேன்.முதல் பாகத்தை இயக்கிய சசி பிஸியாக இருப்பதால் இந்த பாகத்தை அவர் இயக்கமாட்டார்.இந்த படத்திற்கு இசையும் நானே அமைப்பேன் என்று தெரிவித்தார்.இந்த படத்தின் விஜய் ஆண்டனி ஏற்பாரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்

Vijay Antony Turns Story Writer For Pichaikaran 2