பிரபல மாடல் ஆக இருந்து பல குறும்படங்களில் நடித்து அசத்தியிருந்தவர் அஞ்சனா ஜெயபிரகாஷ்.இவர் நடித்திருந்த Muse என்ற குறும்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது மேலும் பல விருது விழாக்களிலும் விருதுகளை அள்ளியது.இதனை தொடர்ந்து தனது கல்லூரி ஜூனியர் கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் நடித்த அஞ்சனாவும் பலரின் கவனத்தையும் ஈர்க்கத்தொடங்கினார்.தொடர்ந்து இவருக்கு பல வாய்ப்புகள் வந்தன.இதனை அடுத்து சில குறும்படங்கள்,வெப் சீரிஸ் என்று நடித்து அசத்தி வந்தார் அஞ்சனா.

2019-ஆம் ஆண்டு வெளியான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸில் இவர் நடித்திருந்தார்.இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய இந்த தொடரில் இளம் வயது ஜெயலலிதாவாக நடித்திருந்தார் அஞ்சனா.இந்த தொடரின் வெற்றி இவரை பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகியது.இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார் அஞ்சனா.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் அஞ்சனா அவ்வப்போது தனது புகைப்படங்களையும்,வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.தற்போது தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.இவரது செம ஹாட்டான இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

A post shared by Anjana Jayaprakash (@anjanajp)