2016-ல் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா,ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் pelli choopulu.தருண் பாஸ்கர் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கெளதம் மேனன் 2016-ல் கைப்பற்றி அவரே தயாரித்து வெளியிட திட்டமிட்டிருந்தார்.

பொன் ஒன்று கண்டேன் என்று பெயரிடப்பட்டிருந்த இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் தமன்னா ஹீரோயினாகவும் நடிக்கவிருந்தனர்.பின்னர் சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டு,ரீமேக் உரிமையும் கைமாற்றப்பட்டது.A Studios LLP, A Havish Production, SP Cinemas, Madhav Media and Third Eye Entertainment இணைந்து இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்றனர்.

இந்த படம் புதிய குழுவோடு தொடங்கி படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கின்றனர்.அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.ஹரிஷ் கல்யாண் இந்த படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஓ மணப்பெண்ணே என்று இந்த படத்திற்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வரும் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.