திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, மண்ணச்சநல்லூர், முசிறி, மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி, துறையூர் (தனி), ஸ்ரீரங்கம் என 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மண்ணச்சநல்லூர் தொகுதி திருச்சியில் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றாகும். மண்ணச்சநல்லூர் தொகுதியில் தற்போது 2,43,272 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,17,640, பெண்கள் 1,25,601, இதர 31 என கூடுதல் பெண் வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும் உள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை இந்த தொகுதி அவர்களுக்கு ராசியான தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. மண்ணச்சநல்லூரில் அதிமுக வென்றால் மாவட்டத்தில் பெரும்பாலான தொகுதிகளை அதிமுக கைப்பற்றுவது வழக்கம் என்கிறார்கள். இதனால் இந்த தொகுதிக்கு வேட்பாளர் தேர்வில் அதிமுக மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு முறையும் செயல்பட்டு வருகிறது. 

இந்தமுறை அதிமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான பரமேஸ்வரி முருகனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க அக்கட்சியின் தலைமைக்கு துளியும் விருப்பமில்லை என தெரிய வருகிறது. ஜெயலலிதா இருக்கும் வரை இருந்த இடம் தெரியாமல் இருந்த இவர் அதற்கு பிறகு தனது சுய ரூபத்தை காட்ட தொடங்கியதாக குமுறுகிறார்கள் அதிமுகவினர். 

இதனால் வரும் தேர்தலில் புதிய முகம் ஒன்றுக்கு மண்ணச்சநல்லூர் தொகுதியில் வாய்ப்பு வழங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொன்.செல்வராஜ் வேட்பாளர் ரேஸில் முதலிடத்தில் இருக்கிறார். ஓபிஎஸ்- இபிஎஸ் என இருவரிடமும் விசுவாசம் காட்டுபவர் பொன்.செல்வராஜ் என்கிறார்கள். இது தவிர, அம்மன் கல்விக்குழும தலைவர் என்பதால் திருச்சி மாவட்டம் முழுவதுமே அறியப்பட்ட நபராக உள்ளார். திருச்சியில் சாதாரண அதிமுக நிர்வாகிகள் மத்தியிலும் இவருக்கு நல்ல பெயர் உள்ளது.

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டியிட்ட போது அதவத்தூர் ஊராட்சியில் தேர்தல் பொறுப்பாளராக இருந்து அந்த கிராமத்தில் உள்ள 100 சதவீத வாக்குகளையும் இரட்டை இலைக்கு பெற்றுக் கொடுத்து ஜெயலலிதா கைகளால் பரிசு பெற்றவர்

இதனிடையே இவருக்கு போட்டியாக முன்னாள் அமைச்சர் பூனாட்சி, முன்னாள் எம்.எல்.ஏ. பிரின்ஸ் தங்கவேல் உள்ளிட்டோரும் சீட் கேட்டு வருகின்றனர். ஆனால் இவர்களெல்லாம் இதற்கு முன்னர் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் என்பதால், இதுவரை எம்.எல்.ஏ.வாகாத பொன்.செல்வராஜை வேட்பாளராக களமிறக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பொன் செல்வராஜ் தவிர, முன்னாள் எம்எல்ஏ பிரின்ஸ் தங்கவேலு, அதிமுக மாணவரணி மாவட்டச் செயலாளர் அறிவழகன் ஆகியோரும் அதிமுகவின் வேட்பாளருக்கான ரேஸில் உள்ளனர். எந்த தொகுதி யாருக்கு என்ற என்ற பரபரப்புகளோடு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. 