இந்திய திரையுலகின் ரசிகர்களின் நாடியறிந்து இசையமைக்கும் திறன் கொண்டவர் இசையமைப்பாளர் அனிருத். பாடல்களில் கேமியோ, கான்செர்ட் மேடைகளில் நடனம் என ஜொலித்து கொண்டிருப்பதால் ராக்ஸ்டார் என அன்போடு அழைக்கப்படுகிறார். 2012-ம் ஆண்டு வெளியான 3 படம் மூலம் அறிமுகமானவர், இன்று பிஸியான இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு இசையமைத்த பெருமையையும் பெற்றுள்ளார். 

Anirudhs Play At Home Cricket Challenge Video

இந்நிலையில் அனிருத் தனது ஸ்டுடியோவில், கிரிக்கெட் விளையாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் தனது நண்பர்களையும் சேலஞ் செய்துள்ளார். எனது கிரிக்கெட் திறன் மிகவும் மோசமானது என்று கூறியவர், கிரிக்கெட் வீரர் போல் ஸ்டைலாக விளையாடியுள்ளார். கையில் MRF மட்டையுடன் ஸ்டைலாக உள்ளார் அனிருத். இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. 

Anirudhs Play At Home Cricket Challenge Video

அனிருத் இசையில் மாஸ்டர் படத்தின் ஆல்பம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இதைத்தொடர்ந்து இந்தியன் 2, டாக்டர், சியான் 60 போன்ற படங்கள் அனிருத் கைவசம் உள்ளது.